சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுக செயல்படாது.. நாஞ்சில் சம்பத் ஆவேச பேச்சு
சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுக செயல்படாது என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சிவகங்கை: நிலத்தை நிராகரித்து விட்டு தண்ணீர் செல்லாததைப் போல சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுக செயல்படாது என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் டி.டி.வி. தினகரன் கைதை கண்டித்து நடந்த பொதுக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ஓ.பி.எஸ்.சுக்கு மருத்துவத்தை பற்றி என்ன விவரம் தெரியும்? அவருக்கு ஜெயலலிதா மறைவின் மர்மத்தை பற்றி கேட்க என்ன அருகதை உள்ளது?

ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த போது, 74 தலைவர்கள் வந்து பார்த்தார்கள். அவ்வாறு இருக்கும் போது ஜெயலலிதா மரணம் எப்படி மர்மமாக இருக்கும்? சசிகலா மற்றும் தினகரன் மீது புகார் சொல்லும் பன்னீர் செல்வத்திற்கு தண்டனை கொடுக்க பொது மக்களிடமும், இளைஞர்களிடமும் நீதி கேட்க வந்துள்ளேன்.
அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் எப்போது எந்த கட்சியில் இருப்பார் என்று யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு பக்கமும் காற்று அடிக்கும் போது அவர் ஒவ்வொரு கட்சிக்கும் சென்று விடுவார். இவர் அ.தி.மு.க.வை விமர்சிக்க என்ன அருகதை உள்ளது?
அ.தி.மு.க.வை காப்பாற்ற வந்தவர் தான் தினகரன். இவர்தான் நிதி அமைச்சர் என்று சொன்ன அமைச்சர்கள், இன்று ஏன் மவுனமாக இருக்கிறார்கள்? ஓ.பி.எஸ். தமிழகத்தில் அனாதையாக திரியும் காலம் வெகு விரைவில் வர உள்ளது. தினகரன் மவுனமாக இருப்பது, தமிழகத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கும்.
திஹாரில் இருந்து தினகரன் விடுதலையாகி வரும்போது ஒரு கோடி தமிழர்கள் அவரை வரவேற்பார்கள். நிலத்தை நிராகரித்து விட்டு தண்ணீர் செல்லாததைப் போல சசிகலா- தினகரன் இல்லாமல் கட்சி செயல்படாது. இவ்வாறு அவர் பேசினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications