கணவர் மீதான பாசம் என்பதெல்லாம் சசிகலா போடும் வேஷம் - தீபா பொளேர்
கணவர் மீதான பாசம் என்பதெல்லாம் சசிகலாவின் நாடகம் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: சசிகலா மனிதாபிமானம் இல்லாதவர், அரசியல் காய்களை நகர்த்தவே அவர் பரோலில் வந்துள்ளதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, சசிகலா மனிதாபிமானம் இல்லாதவர் என்பதற்கு நிறைய உதாரணம் உள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த தனது அத்தையை பார்க்க அனுமதிக்காமல் நடுரோட்டில் தன்னை நிற்க வைத்தவர் தான், தற்போது மனிதாபிமானம் பற்றி பேசுகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

சசிகலாவின் நாடகம்
அரசியல் காய்களை நகர்த்தவே அவர் பரோலில் வந்திருக்கிறார். கணவர் மீதான பாசம் என்பதெல்லாம் சசிகலாவின் நாடகம் என்றும் தீபா கூறினார்.

கூடுதல் ஆவணம் தாக்கல்
சின்னம் பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றுக்கொண்டதாக வந்த செய்தி வதந்தி. மனுவை திரும்ப பெறவில்லை. வரும் 13ம் தேதி கூடுதல் ஆவணங்களுடன் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்போகிறோம்.

தொடர்ந்து குரல் தருவேன்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆணையத்தால் உண்மை வெளிவராது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் வரை தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் தீபா கூறியுள்ளார்.

ஹைகோர்ட்டில் வழக்கு
சசிகலா பரோலில் வந்ததை கடுமையாக சாடியுள்ள தீபா, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிற்கு தாங்கள்தான் வாரிசு என்று கூறி வழக்கு போட்டுள்ளார் தீபா. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications