யாரையும் பார்க்கவிடாமல் சசிகலா குடும்பம் உள்ளே புகுந்து ஜெ.வை கொன்றுவிட்டது.. மதுசூதனன் பகீர்
ஜெயலலிதாவை சந்திக்க யாரையும் அனுமதிக்காமல் சசிகலா குடும்பம் அவரை சாகடித்துவிட்டதாக மதுசூதனன் குற்றம் சாட்டியுள்ளார்.
Recommended Video

சென்னை: ஜெயலலிதாவை சந்திக்க யாரையும் அனுமதிக்காமல் சசிகலா குடும்பம் உள்ளே புகுந்து அவரை சாகடித்துவிட்டதாக மதுசூதனன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா உயிரிழந்து 10 மாதங்கள் ஆகியும் அவரது மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகாமல் உள்ளது. ஆனால் சசிகலா குடும்பத்தினர் தான் ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் என கடந்த சில நாட்களாக அமைச்சர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அண்மையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா இட்லியெல்லாம் சாப்பிடவில்லை நாங்கள் பொய் கூறினோம் என்றார். ஜெயலலிதா இதை சாப்பிட்டார், அதை சாப்பிட்டார் என்று நாங்கள் கூறியதற்கு எங்களை மன்னித்து விடுங்கள் என்றார்.

யாரையும் அனுமதிக்கவில்லை
மேலும் ஜெயலலிதாவை சசிகலா குடும்பத்தினரே பார்த்துக் கொண்டனர். அவரை பார்க்க யார் வந்தாலும் சந்திக்க அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

மதுசூதனன் ஒப்புதல்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி அவைத்தலைவர் மதுசூதனன், திண்டுக்கல் சீனிவாசன் கூறுவது உண்மைதான் என ஒப்புக்கொண்டுள்ளார்.

தானும் பார்க்கவில்லை
மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்க சசிகலா குடும்பத்தினர் யாரையும் அனுமதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை கட்சியின் அவைத்தலைவரான தானும் பார்க்கவில்லை என்றார்.

சசிகலா குடும்பம் சாகடித்துவிட்டது
அவைத்தலைவரே பார்க்கவில்லை என்றபோது மற்றவர்கள் எப்படி சந்தித்திருக்க முடியும் என்று மதுசூதனன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஜெயலலிதாவை பார்க்க யாரையும் அனுமதிக்காமல் சசிகலா குடும்பம் உள்ளே புகுந்து அவரை சாகடித்து விட்டதாக மதுசூதனன் குற்றம் சாட்டியுள்ளார்.

தசரா பண்டிகைக்குள்..
தசரா பண்டிகை முடிவதற்குள் இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்று மதுசூதனன் கூறியுள்ளார். இரட்டை இலை கிடைத்த பிறகு இப்போதுள்ள நிலைமை மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications