எம்ஜிஆரைப் போல கூட்டம் கூடுது.... முதல்வராகிவிடுவேன்.. மிதப்பில் தினகரன்.. கடுப்பில் சசி குடும்பம்!
தமக்கு மக்களின் பேராதரவு உள்ளது; எம்ஜிஆருக்கு கூடியதைப் போல கூட்டம் கூடுகிறது என மிதப்பில் இருக்கிறாராம் தினகரன்.
சென்னை: சசிகலா தம்மை டூப்ளிகேட் ஜெயலலிதாவாக உருமாற்றிக் கொண்டது போல தினகரன் தம்மை ஒரு எம்ஜிஆர் போல மக்கள் செல்வாக்கு படைத்த தலைவர் என நினைத்துக் கொண்டு முதல்வர் கனவில் மிதந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா குடும்பத்தினர் தினகரன் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சசிகலாவை அதிமுக பொதுச்செயலராக்க கோரி அக்கட்சியினர் போயஸ் கார்டனில் நாடகமாடிக் கொண்டிருந்த போது எங்கோ ஒரு மூலையில் ஒதுங்கி நின்றிருந்தவர் தினகரன். அரசியலை விட்டே ஒதுங்கிப் போய் இருந்த தினகரன் அப்போதுதான் தலைகாட்டிக் கொண்டிருந்தார்.
சசிகலா சிறைக்குப் போன பின்னர் அதிமுக துணைப் பொதுச்செயலர் பதவி கொடுக்கப்பட்டதால் மீடியா வெளிச்சம் கிடைத்தது தினகரனுக்கு. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஒதுங்கிக் கொள்ள ஆலமரம் கிடைக்காதா என ஏங்கிய அதிமுக தொண்டர்களுக்கு தீபாவின் வீடு நிழல் தந்தது.

தினகரனுக்கும் ஆதரவு
பின்னர் ஓபிஎஸ்-ன் கிரீன்வேஸ் இல்லம் அடைக்கலம் கொடுத்தது. இந்த வரிசையில் தினகரனையும் அதிமுகவினர் ஆதரித்தனர்.

சொந்தங்கள் பங்கேற்பு
தினகரன் மேலூரிலும் திருச்சியிலும் கூட்டம் நடத்த சசிகலா குடும்பத்தினர் டெல்டா மாவட்டங்களில் இருந்து சொந்த பந்தங்களை இறக்கி மாஸ் காட்டினர். திவாகரன் மகன் ஜெயானந்தும் கூட இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

எம்ஜிஆரை போல ஆதரவு
ஆனால் மேலூரிலும் திருச்சியிலும் கூடிய கூட்டம் தமக்கானது மட்டுமே; நமக்கும் எம்ஜிஆரைப் போல கூட்டம் வருகிறது என ரொம்பவே பேராசைப்பட்டுவிட்டார் தினகரன். இதனால்தான் தீந்தமிழன் தினகரன் பேரவையை வலிமையாக்க முயற்சித்தார்.

வெற்றி மிதப்பில் தினகரன்
vஇந்நிலையில் ஆர்கே நகர் தொகுதியில் அபாரமாக ஜெயித்ததும் தலைகால் புரியாமல் திக்குமுக்காடுகிறாராம் தினகரன். எம்ஜிஆரைப் போல தனிக்கட்சி தொடங்கி ஆட்சியை பிடிப்பேன் என தடாலடி காட்டி வருகிறார். இதனால் சசிகலா குடும்பமும் தினகரனை எதிர்க்கிறது; இளவரசி குடும்பமும் அவரை எதிர்க்கிறது; தினகரனுக்காக பதவியை பறிகொடுத்தவர்களும் கதறுகிறார்கள். இவரை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் தவிக்கின்றனர் ஆதரவாளர்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications