For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலா பழிவாங்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.. மனசாட்சியே இல்லாமல் பேசும் அமைச்சர்!

சசிகலா பழிவாங்கப்பட்ட சிறைக்க அனுப்பப்பட்டுள்ளார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா பழிவாங்கப்பட்ட சிறைக்க அனுப்பப்பட்டுள்ளார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சசிகலா விரைவில் விடுதலையாகி கட்சிப்பணியாற்றுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக சுப்பிரமணியன் சுவாமி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
சென்னையில் நடைபெற்ற இவ்வழக்கு, திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் கோரிக்கையை ஏற்று கடந்த 2004-ம் ஆண்டு பெங்களூருவுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இறுதியில் 2014 ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், சசிகலா உள்ளிட்டோருக்கு ரூ.10 கோடியும் அபராதம் வித்தார்.

குமாரசாமி தீர்ப்பு

குமாரசாமி தீர்ப்பு

இதையடுத்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரையும் நிரபராதி என விடுதலை செய்து உத்தரவிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்று தீர்ப்பு

சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்று தீர்ப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

குன்ஹாவின் தண்டனையே

குன்ஹாவின் தண்டனையே

இதில் ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் அவர் விடுவிக்கப்படுவதாக அறிவித்த நீதிபதிகள் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் குன்ஹா விதித்த தண்டனை உறுதி செய்தது. இதையடுத்து சசிகலா உள்ளிட்ட 4 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

பழிவாங்கப்பட்டுள்ளார் சசி

பழிவாங்கப்பட்டுள்ளார் சசி

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சசிகலா பழிவாங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளார். இத்தனை விசாரணைகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் சசிகலா குற்றமற்றவர் என்ற ரீதியில் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

கொஞ்சமும் மனசாட்சியில்லாமல்..

கொஞ்சமும் மனசாட்சியில்லாமல்..

சசிகலாதான் ஒவ்வொருவரையும் உருவாக்கினார் என்றும் அவர் கூறியுள்ளார். விரைவில் வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் கட்சிப் பணியாற்றுவார் என்றும் அவர் ராஜேந்திர பாலாஜி கூறினார். கொஞ்சமும் மனசாட்சியில்லாமல் பேசுகிறாரே எனக்குமுறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்..

English summary
Minister Rajendra Balaji has said that Sasikala has been sent to prison in a revenge . He further said that Sasikala will soon be released and will be in party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X