எம்ஜிஆர், ஜெயலலிதா செய்யாததை செய்த சசிகலா.. எதிர்ப்புக்கு காரணம் கூறும் அதிமுக எம்எல்ஏக்கள்
சென்னை: அதிமுகவில் வாரிசு அரசியலை அறிமுகம் செய்ததால்தான் சசிகலாவை எதிர்ப்பதாக அதிமுக எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.
தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் முருகுமாறன் (காட்டுமன்னார்கோவில் தொகுதி) ராமச்சந்திரன் (குன்னம்), கனகராஜ் (சூலூர்), சண்முகம் (கிணத்துக்கடவு), பாண்டியன் (சிதம்பரம்), கஸ்தூரி வாசு (வால்பாறை)அம்மன் அர்ஜுன் (கோவை தெற்கு) ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

முருகுமாறன் மற்றும், ராமச்சந்திரன் ஆகியோர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பொதுச் செயலாளர் பதவிக்கான விதி என்ன என்பது எங்களுக்கு தெரியும். அதனை வெற்றிவேல் (டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ) சொல்லி தர வேண்டியதில்லை. வெற்றிவேல் எங்களுக்கு கழக விதிமுறை தெரியாது என்கிறார். முருகுமாறனும் வழக்கறிஞர், அருண்மொழி தேவனும் வழக்கறிஞர். எங்களை போன்ற உண்மை விசுவாசிகளை அவர்கள் புறம் தள்ளுகிறார்கள்.
அதிமுகவில் எம்.ஜி. ஆர் ஜானகியை வாரிசாக்கவில்லை. ஜெயலலிதாவும் தனதுத சொந்தங்களான தீபாவையோ, தீபக்கையோ வாரிசாக்கவில்லை.
ஆனால் தற்போது பொதுச் செயலாளர் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அவரது உறவினர் தினகரனை கட்சி பதவியில் நியமித்தது தவறானதாகும். வாரிசு அரசியலை அதிமுகவிற்குள் புகுத்தியதால் சசிகலாவை எதிர்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
-
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications