இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க சசிகலா வலியுறுத்தல்
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சசிகலா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அனுமதியின்றி இலங்கை கடல்பரப்பில் மீன்பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்கள் பலரையும் அந்நாட்டு கடற்படை சிறைபிடித்துச் செல்வது வாடிக்கையாக உள்ளது. இதன்படி, இதுவரை 51 மீனவர்களை இலங்கை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளது.

அவர்களை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக, சமீபத்தில் இலங்கை அரசு, இந்தியாவிடம் தெரிவித்துள்ளது. இதன்பேரில் அந்த மீனவர்கள் விடுதலையை துரிதப்படுத்தி, அவர்களை பாதுகாப்பாக மீட்டு, தமிழகம் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.
மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகளை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு உதவ வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் சசிகலா தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications