• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

சசிகலா புஷ்பாவிற்காக ரத்தம் சொட்ட அடிவாங்கிய லிங்கேஸ்வர திலகன் - பிளாஷ்பேக்

By Mayura Akhilan
|
  ரத்தம் சொட்ட சொட்ட அடிவாங்கிய கணவரை கழட்டிவிட்ட சசிகலா புஷ்பா- வீடியோ

  சென்னை: ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுகவில் சசிகலாவை எதிர்த்து நின்ற சசிகலா புஷ்பாவிற்காக அவரது முன்னாள் கணவர் லிங்கேஸ்வர திலகன் ரத்தம் சொட்ட சொட்ட அடிவாங்கிய வரலாறுகள் நிகழ்ந்துள்ளன. சசிகலா புஷ்பாவிற்கும் அவரது கணவரும் இடையே விவகாரத்து கிடைத்துள்ள நிலையில் ஒரு சின்ன பிளாஷ்பேக்.

  ஆங்கில இலக்கியம் படித்த சசிகலா புஷ்பாவிற்கு ஆசிரியை ஆக வேண்டும் என்பது ஆசை, ஆனால் லிங்கேஸ்வர திலகனுடன் திருமணம் என்று விதி முடிவு செய்தது. கனவோடு கணவருடன் சென்னைக்கு வந்த சசிகலா புஷ்பாவின் வாழ்க்கையில் அரசியல் ஆசை துளிர் விட்டது. 2009 முதல் அதிமுகவில் படிப்படியாக வளர்ச்சியடைந்தார்.

  ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை அதிமுகவில் கட்சியிலோ ஆட்சியிலோ பதவியில் இருந்தவர்கள் வாயை திறக்காமல் அமைதியாக இருந்தார்கள். குடித்து விட்டு உளறிய சர்ச்சையில் சிக்கிய சசிகலா புஷ்பாவை மகளிரணி பதவியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா.

  திருச்சி சிவா எம்பி உடனான சர்ச்சையில் சிக்கிய சசிகலா புஷ்பாவை போயஸ்கார்டனுக்கு அழைத்து ரெய்டு விட்டார் ஜெயலலிதா. ஆனாலும் அசராத சசிகலா புஷ்பா, ராஜ்யசபாவில் ஜெயலலிதாவிற்கு எதிராக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அவருக்கு பின்னால் இருந்த பலமான பின்னணியே.

  சசிகலாபுஷ்பா கணவர்

  சசிகலாபுஷ்பா கணவர்

  ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா கண்ணீர் விட்டு கதறி அதிர்ச்சியை ஏற்படுத்திய போது, சசிகலா புஷ்பாவின் விமர்சனங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர் அரசியலுக்காக இப்படியெல்லாம் செய்கிறார்... அனைத்துமே 'நாடகம்' என்று சொன்னவர் லிங்கேஸ்வர திலகன். எனக்கு அம்மாதான் தெய்வம்... என் மனைவியின் நடவடிக்கைக்கும் எனக்கும் எந்த ஒரு சம்பந்தமுமே இல்லை. நான் எப்போதும் அம்மாவின் விசுவாசியாகவே இருப்பேன் என்று பேட்டி கொடுத்தார்.

  ரத்த களறியாக லிங்கேஸ்வர திலகன்

  ரத்த களறியாக லிங்கேஸ்வர திலகன்

  கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அந்தக் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அதே மாதத்தில் கூறியது சசிகலாவை எதிர்த்து போட்டியிடப் போவதாக கூறினார் சசிகலா புஷ்பா. அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு விருப்ப மனு கொடுக்க வந்தார் லிங்கேஸ்வர திலகன். அதிமுக நிர்வாகிகளால் தாக்கப்பட்டார் சசிகலா புஷ்பா கணவர் லிங்கேஸ்வர திலகன்.

  ரத்தக்களறியான லிங்கேஸ்வரன்

  ரத்தக்களறியான லிங்கேஸ்வரன்

  இதில் லிங்கேஸ்வர திலகனுக்கு தலை மற்றும் உடம்பில் பலமான அடிகள் விழுந்தன. அவருக்கு மூக்கு உடைப்பட்டு ரத்தம் பீறிட்டது. ரத்த வெள்ளத்தில் துடித்த லிங்கேஸ்வர திலகனை காவல் துறையினர் அழைத்து சென்றனர்.

  தனது கணவர் லிங்கேஸ்வர திலகன் மீது தாக்குதல் நடத்தியவர்களை சும்மா விட மாட்டேன் என்று எச்சரித்தார் சசிகலா புஷ்பா.

  கணவன், மகன்

  கணவன், மகன்

  பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போடப்பட்ட சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் மீதும் வழக்கு பாய்ந்தது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வெளிநாட்டில் பதுங்கினால் சசிகலா புஷ்பா. பலமான சட்ட உதவியால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பியதோடு ஒரு நாள் கூட சிறைக்கு செல்லவில்லை சசிகலா புஷ்பா.

  கணவருடன் பிரச்சினை

  கணவருடன் பிரச்சினை

  எந்த சசிகலாவை எதிர்த்து அரசியல் செய்தாரோ, அதே சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரனுடன் இணக்கமான இருந்தார். தனி அமைப்பு தொடங்கிய போதும் உடனிருந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவருமே பரஸ்பர விவாகரத்து தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் சமீபத்தில் இருவருக்கும் பரஸ்பரம் விவாகரத்து அளித்து டெல்லி ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சசிகலா புஷ்பாவிற்காக அடிவாங்கியதெல்லாம் வீணா போச்சே.

   
   
   
  English summary
  The marriage between both the petitioners namely Ms Sasikala Pushpa and Lingeswara Thilagan is dissolved by a decree of divorce by mutual consent.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X