ஜெ.உடல்நிலை குறித்து கூறாவிட்டால் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்வது உறுதி...சசிகலா புஷ்பா திட்டவட்டம்
சென்னை: முதல்வர் ஜெ. உடல்நிலை குறித்து ஓரிரு நாட்களில் வெளிப்படையாக கூறாவிட்டால் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்வது உறுதிதான் என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா மீண்டும் கூறியுள்ளார்.
காமராஜரின் நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா புஷ்பா எம்பி நேற்று அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்பதுதான் எனது எண்ணம்.

தெரிவிக்க மறுப்பு
முதல்வரின் உடல்நிலை குறித்த தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க மறுக்கின்றனர். தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரு ராஜ்யசபா உறுப்பினர் என்ற முறையில், முதல்வரின் உடல்நிலை குறித்து வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

யாருக்கும் அனுமதி இல்லையே..
அதிகாரிகள், மருத்துவர்கள், உடனிருப்பவர்கள் என யாரும் நிலைமையை வெளிப்படையாக கூற மறுக்கின்றனர். முதல்வர் இருக்கும் வார்டுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகளான பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், பொன்னையன், செங்கோட்டையன், மதுசூதனன், கோகுல இந்திரா, ஓ.பன்னீர் செல்வம் ஆகியவர்களைக்கூட அனுமதிக்கவில்லை. தமிழக சுகாதாரத்துறை அமைச்சருக்கு கூட முதல்வர் உடல்நிலை பற்றி தெரியவில்லை.

அரைநிமிட வீடியோ கூட...
புகைப்படத்தையோ, வாட்ஸ்-அப்பில் ஒரு அரை நிமிடம் பேசும்படியான வீடியோவையோ வெளியிட்டிருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படி எதுவும் செய்யவில்லை.

ஆட்கொணர்வு மனு
முதல்வரின் உடல்நிலை குறித்து ஓரிரு நாட்களில் வெளிப்படையாக கூறாவிட்டால் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வேன். மேலும் எம்பி என்ற முறையில் மத்திய அரசிடம் பேசுவேன்.
இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications