ஜெ.வுக்கு எதிராக புகார் கூறிய சசிகலா புஷ்பாவின் கணவர் வீடு மீது கல்வீச்சு!
நெல்லை: ஜெயலலிதா மீது ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா சரமாரியாக புகார் கூறியிருந்த நிலையில், நெல்லை மாவட்டத்திலுள்ள அவரது வீடு மர்ம நபர்களால் தாக்கப்பட்டது.
போயஸ் கார்டனில் ஜெயலலிதா தன்னை அறைந்ததாகவும், எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாகவும் சசிகலா புஷ்பா ராஜ்யசபாவில் பரபரப்பாக பேசினார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி அழுதார்.

நிருபர்களிடம் பேசும்போது, தனக்கோ, கணவருக்கோ, மகனுக்கோ ஏதாவது நேர்ந்தால் அதற்கு அதிமுகதான் பொறுப்பு எனவும் சசிகலா புஷ்பா தெரிவித்தார்.
இந்த நிலையில், நெல்லை மாவட்டத்திலுள்ள சசிகலா புஷ்பாவின், கணவரான லிங்கேஷ்வரின் பூர்வீக வீட்டு மீது இன்று மதியம், மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கரைச்சுத்து உவரி கிராமத்தில், புஷ்பா கணவர் லிங்கேஷ்வரனின் பூர்வீக இல்லம் உள்ளது. அங்குதான் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் அக்கிராமத்தில் பரபரப்பு நிலவுகிறது.
இதனிடையே, சசிகலா புஷ்பா டெல்லியில் வசிக்கும் இல்லத்திலும், சென்னை வீட்டிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications