For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விவிஐபி பாஸ் இல்லை- மன்னார்குடி கோஷ்டிக்கு நோஸ்கட்- மனைவியுடன் குடியரசு தினத்தில் ஓபிஎஸ் பங்கேற்பு!

குடியரசு தின விழாவில் விவிஐபிக்களாக பங்கேற்க விரும்பிய மன்னார்குடி கோஷ்டிக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். இந்த நிகழ்ச்சியில் மனைவியுடன் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்றதால் மன்னார்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: குடியரசு தின விழாவில் விவிஐபிக்களாக தங்களை காட்டிக் கொள்ள சசிகலா உட்பட மன்னார்குடி கோஷ்டி மேற்கொண்ட முயற்சியை முறியடித்துவிட்டார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். இதனால் மன்னார்குடி வகையறா கடும் அதிர்ச்சியில் இருக்கிறது என்கின்றன போயஸ் கார்டன் வட்டாரங்கள்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்ற மன்னார்குடி கோஷ்டி முயன்று தோற்றது. அதன் பின்னர் அதிமுக பொதுச்செயலராகினார் சசிகலா. இதனைத் தொடர்ந்து முதல்வர் பதவிக்கு குறி வைத்தது மன்னார்குடி குடும்பம்.

முதல்வர் பதவி

முதல்வர் பதவி

சசிகலா, நடராஜன், திவாகரன், தினகரன் ஆகிய 4 பேரும் முதல்வர் பதவிக்கு குறிவைத்து காத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் மத்திய அரசு இந்த முயற்சியை கடுமையாக தடுத்து நிறுத்தி வருகிறது.

நெருக்கடி

நெருக்கடி

முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மன்னார்குடி கோஷ்டியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுதந்திரமாக இயங்கி வருகிறார். இந்த நிலையில் குடியரசு தின விழாவில் விவிஐபி-களாக தாங்களும் இடம்பெற வேண்டும் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்து பார்த்தது.

பாஸ் தர மறுப்பு

பாஸ் தர மறுப்பு

இதை நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளம் நேற்று பதிவு செய்திருந்தது. விவிஐபி பாஸ்களை கடைசி வரையில் மன்னார்குடி கோஷ்டிக்கு அரசு தரப்பில் கொடுக்கவே இல்லை.

மனைவியுடன் பங்கேற்பு

மனைவியுடன் பங்கேற்பு

அத்துடன் மன்னார்குடி கோஷ்டிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மனைவியுடன் குடியரசு தின நிகழ்ச்சியில் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இது மன்னார்குடி வகையறாவை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

English summary
TamilNadu Chief Minister O Panneerselvam and his wife witnessing cultural items during Republic Day celebrations at Chennai Marina.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X