சசிகலா கதை இன்னும் இரண்டு நாட்களில் முடியப் போகிறது... பிஎச்.பாண்டியன் ஆவேசம்
சசிகலா கதை முடியப்போகிறது என அதிமுக முன்னாள் சபாநாயகர் பிஎச் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகலா கதை இன்னும் 2 நாட்களில் முடியப் போகிறது என அதிமுக முன்னாள் சபாநாயகர் பிஎச்.பாண்டியன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஒன்று கூடி வருவதால் சசிகலா தரப்பு பீதியில் உறைந்துள்ளனர்.
அதிமுக அவை தலைவர் மதுசூதனன் முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்தார். சசிகலாவிடம் இருந்து அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே அதிமுக எம்எல்ஏக்கள் 5 பேர் முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து அவரது அணியில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் மதுசூதனனும் முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மதுசூதனனை வரவேற்று பேசிய பிஎச் பாண்டியன் ஓபிஎஸ் மக்கள் புரட்சியை உருவாக்கியுள்ளார் என கூறினார். அதிமுக அவைத் தலைவர், பொருளாளர் என அதிமுக பெட்டகமே இங்கிருக்கிறது என்று கூறியவர், சசிகலா ஒன்றுமில்லை என தெரிவித்தார்.
சசிகலா மற்றும் மன்னார்குடி கோஷ்டியின் கதை இன்னும் 2 நாட்களில் முடிந்து விடும் என்றும் பிஎச்.பாண்டியன் கூறினார். அதிமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் சசிகலா தரப்பு பயங்கர அதிர்ச்சியில் உறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications