எடப்பாடிக்கு ஆப்பு ரெடி.. சிறைவாசி சசிகலா ஆசியுடன் உதயமாகுது இன்னொரு கோஷ்டி!
டெல்லியை முழு வீச்சில் ஆதரிக்கும் எடப்பாடி அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: அரசியலில் இருந்து தம்மை ஓரங்கட்டிவிட்டு பாஜக ஆசியுடன் ஆட்சி நடத்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தக்க பாடம் புகட்டுவேன் என பெங்களூரு சிறையில் சசிகலா கொதித்துபோய் சூளுரைத்தாராம்.
இந்திய அரசியல் வரலாற்றில் அதிமுகவைப் போல விசித்திரமான காட்சிகள் அரங்கேறும் கட்சி எதுவும் இல்லை. அக்கட்சியின் பொதுச்செயலராக கூறப்படும் சசிகலா, துணைப் பொதுச்செயலரான தினகரன் இருவரும் சிறையில் உள்ளனர்.

காவடி தூக்குவதா?
இந்த இருவரைப் பற்றியும் எந்த கவலையும் இல்லாமல் மத்தியில் ஆளும் பாஜகவை திருப்திபடுத்தும் வகையில் அதே அதிமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிமுகவின் அத்தனை கோஷ்டிகளுமே டெல்லிக்கு காவடி தூக்குவதில் மும்முரமாக இருக்கின்றன.

கொந்தளித்த சசி
இத்தகவல்களை பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இதை கேட்டு கொந்தளித்து போய்விட்டாராம் சசிகலா.

ஆட்சியை கவிழ்ப்பேன்
தம்முடைய ஆதரவு எம்.எல்.ஏக்களை வெளியே வாங்கன்னு சொன்னா போதும்.. அடுத்த நிமிசமே எடப்பாடி அரசு கவிழ்ந்து போய்விடும்... இதை எல்லாம் புரியாமலா ஆடுகிறார்கள் என சிறையில் சீறியிருக்கிறார் சசிகலா. எல்லா விஷயத்திலும் அடிமைபோல டெல்லியிடம் நடந்து கொள்வதை சகிக்க முடியவில்லை எனவும் கூறியிருக்கிறார் சசிகலா.

புதிய கோஷ்டி?
இந்த ஆட்டங்களுக்கு நிச்சயம் முடிவு கட்டுவேன் என பெங்களூரு சிறையிலும் சபதம் போட்டிருக்கிறாராம் சசிகலா. அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி தலைமையில் புதிய கோஷ்டி முளைத்தாலும் ஆச்சரியமில்லை என்கின்றன மன்னார்குடி வட்டாரங்கள்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications