நீங்க சி.எம். ஆயிடுவீங்க... எனக்காக பிரேயர் செய்யுங்க... சசிகலா வரவேற்பில் ஷாக்’ உரையாடல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வராக வேண்டும் என தம்மிடம் கூறிய முதியவரிடம் எனக்காக பிரார்த்தனை செய்யுங்க என சசிகலா கூறியது பரபரப்பை கிளப்பியுள்ளது.

சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கணவர் நடராஜனை இன்றும் சசிகலா சந்தித்தார். நடராஜனை சந்தித்துவிட்டு சசிகலா திரும்பும் போது வழக்கம் போல அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

Sasikala wants to become as CM?

அப்போது சென்னை ராயப்பேட்டை வி.எம். தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற முதியவரை பார்த்ததும் சசிகலா மகிழ்ச்சியோடு பேசினார். அப்போது, நீங்க சி.எம். ஆயிடுவீங்க என அந்த முதியவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த சசிகலா, நீங்க எனக்காக பிரேயர் செய்யுங்க என கூறியது பரபரப்பை கிளப்பியது. இந்த சுப்பிரமணியன் என்ற முதியவர்தான் சசிகலா-நடராஜன் தம்பதிக்கு முதன் முதலில் சென்னையில் வீடு வாடகைக்கு விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai senior citizen Subramanian today met Sasikala and wishes to become the CM of TamilNadu.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற