ரஜினி தமிழர் அல்லாதவர் என்பதால் பேராபத்து; எம்ஜிஆர்- ஜெ.வுக்கு பொருந்தாது: நாஞ்சில் சம்பத்
ஜெயலலிதாவுக்காக சுகதுக்கங்களை தொலைத்த சூரியப் பெருந்தாய் சசிகலா என நாஞ்சில் சம்பத் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவுக்காக சுகதுக்கங்களை தொலைத்த சூரியப் பெருந்தாய் சசிகலா என புகழாரம் சூட்டியுள்ளார் நாஞ்சில் சம்பத்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத் கூறியதாவது:
தமிழகத்தில் தியாகம் செய்தவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும். தியாகம் செய்தவ தலைவர்கள் சும்மா இருக்கின்றனர்.
ஆனால் எந்த தியாகமும் செய்யாதவர் ரஜினிகாந்த். தமிழ அல்லாதவர் தமிழ்நாட்டை ஆளக் கூடாது. ரஜினிகாந்த் தமிழக அரசியலில் இறங்கினால் பேராபத்து.

கலாசார சீரழிவு
ரஜினிகாந்த் ஒரு கலாசார சீரழிவு. சசிகலாவும் தினகரனும் ஜெயலலிதாவுக்காக 33 ஆண்டுகாலம் தியாகம் செய்தவர்கள். சுகதுக்கங்களை தொலைத்த பெருந்தாய் சசிகலா.

ஜெ.வின் ஆலோசகர் சசிகலா
ஜெயலலிதாவுக்கு ஆலோசகராக வழிகாட்டியாக இருந்தவர் சசிகலா. வழக்கு, அபராதம் என என்ன விதிக்கப்பட்டாலும் தினகரனுக்கு நாடாள்வதற்கு தகுதி இருக்கிறது.

சிறைகளில் நிரபராதிகள்
நீதிமன்றம் சொல்வதாலேயே ஒருவர் குற்றவாளியாகிவிட முடியாது. தமிழகத்தில் 7 மத்திய சிறைச்சாலைகளைப் பார்த்தவன் நான்.. எத்தனையோ நிரபராதிகள் குற்றவாளி கூண்டிலேற்றப்பட்டுள்ளனர்.

இது தத்துவார்த்த யுத்தம்
ஆடிட்டர் குருமூர்த்தியும் ஹெச். ராஜாவும் தினகரனை எதிர்க்கிறார்கள்.. அதனால்தான் நான் தினகரனை ஆதரிக்கிறேன். இதுதான் பெரியார் எங்களுக்கு கற்றுக் கொடுத்தது. இது ஒரு தத்துவ யுத்தம்.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications