அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்பார்.. சொல்கிறார் மதுரை ஆதினம் !
அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்பார் என்று மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகலாவை அதிமுகவுக்கு தலைமை ஏற்க அக்கட்சி மூத்த நிர்வாகிகள் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்பார் என்று மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு காலமானார். இதனையடுத்து தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார். ஆனால் கட்சியின் அதிகாரமிக்க பொதுச் செயலாளர் பதவி இன்னும் காலியாகவே உள்ளது. அதிமுகவில் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் என்றாலும், கட்சி விதிகளின்படி, போட்டியின்றி ஒருமனதாகவே பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இந்த நிலையில் அதிமுகவின் அடுத்த தலைவர் யார் ? என்ற கேள்வி தமிழகத்தில் எழுந்துள்ளது. அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தான் அதிமுக-வின் அடுத்த தலைவராக வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஒருபுறம் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தாலும் தொண்டர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று போயஸ் கார்டன் வந்த மதுரை ஆதினம், ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறினார். இதன் பின்னர் போயஸ் கார்டன் இல்லம் முன்பு செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதினம், அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்பார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை போல ஓ.பன்னீர் செல்வம் தமிழகத்தை ஆட்சி செய்வார் என்று கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications