ஜனாதிபதி, பிரதமர், ராகுல் காந்திக்கு சசிகலா கடிதம்! ஜெ. இறுதி அஞ்சலிக்கு வந்ததற்கு நன்றி தெரிவிப்பு
ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்து குடியரசுதலைவர் பிரணாப் முகர்ஜி பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு சசிகலா நடராஜன் நன்றி கடிதம் எழுதியு
சென்னை: ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்து குடியரசுதலைவர், பிரதமர் மற்றும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு சசிகலா நடராஜன் நன்றி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. மறுநாள், 6ம் தேதி ஜெயலலிதாவுக்கு சென்னையில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் பங்கேற்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜன் இன்று இம்மூவருக்கும் தனித்தனியாக கடிதங்களை எழுதி அனுப்பி, ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலிக்கு நேரடியாக வந்ததற்காக நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். தன்னிடம் அவர்கள் ஆறுதல் கூறியதையும் நினைவு கூர்ந்துள்ளார்.
Thirumathi.V.K.Sasikala's generous & thanking letter to our Honourable President, Prime Minister & Mr. Rahul Gandhi. pic.twitter.com/Bi44Gvhxc1
— AIADMK (@AIADMKOfficial) December 20, 2016
தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை நேற்று நேரில் சந்தித்து பேசிய நிலையில், சசிகலா இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை நேற்று சந்தித்து பேசி ஜெயலலிதா சாவு குறித்து, சிபிஐ விசாாரணை செய்ய வலியுறுத்தி மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications