கழுத்தில் கயிறு இறுக்கி உயிரிழந்தாரா சசிபெருமாள்? போஸ்ட் மார்ட்டம் அறிக்கை சொல்வது என்ன?
கன்னியாகுமாரி: சசி பெருமாள் சாவுக்கு அவரது கழுத்தில் கயிறு இறுக்கியதே காரணம் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உண்ணாமலைக்கடையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி வெள்ளிக்கிழமையன்று செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்திய சசிபெருமாள் மரணமடைந்தார்.

சசிபெருமாள் உடல் பிரேத பரிசோதனை நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. டாக்டர்கள் ராஜேஷ், ஜான்சன் உள்பட 3 பேர் பிரேத பரிசோதனை செய்தனர். 11.35 மணிக்கு பிரேத பரிசோதனை முடிவுக்கு வந்தது. இதனை மருத்துவமனை நிர்வாகமும், போலீசாரும் வீடியோவில் பதிவு செய்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்ததும், டாக்டர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 2 நாட்களில் அவர்கள் பிரேத பரிசோதனை அறிக்கையை போலீசாரிடம் அளிப்பார்கள் என தெரிகிறது. சசி பெருமாளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அரசியல் கட்சியினர் கூறியதாலேயே பிரேத பரிசோதனை செய்யும் போது வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே சசி பெருமாள் சாவுக்கு அவரது கழுத்தில் கயிறு இறுக்கியதே காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது கழுத்தில் கயிறு இறுக்கிய காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
சசிபெருமாள் இறப்பு இயற்கைக்கு மாறான மரணம் (சிஆர்பிசி-174) என மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சசிபெருமாள் தனக்கு தானே கழுத்தில் கயிறு மாட்டி தொங்கியதாகவும் போலீசார் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தில் கயிறு இறுக்கிய தடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications