Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சசிபெருமாளின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்: நாளை உடல் அடக்கம்

Subscribe to Oneindia Tamil

சேலம்: மதுவிலக்கு போராட்டத்தில் உயிரிழந்த காந்தியவாதி சசிபெருமாளின் உடலை பெற அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டியில் நாளை வெள்ளிக்கிழமை சசிபெருமாளின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுவிலக்கு போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் சசிபெருமாளின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

Sasiperumal's family accept to receive his body

கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடையில் இருந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி போராடிய காந்தியவாதி சசிபெருமாள் கடந்த ஜூலை 31ம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆசாரிபள்ளத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது கோரிக்கையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அப்போது தான் அவரது உடலை பெற்றுக்கொள்வோம் என்று அவரது மனைவி மகிழம், மகன்கள் விவேக், நவநீதன், மகள் கவியரசி மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உறவினர்கள் உண்ணாவிரதம்

மறைந்த சசிபெருமாளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இ.மேட்டுக்காடு பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே பந்தல் அமைத்து மகன்கள் விவேக், நவநீதன், மகள் கவியரசி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் கடந்த 1ம்தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இன்று 6வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நீடித்து வருகிறது. காதில் கருப்பு துணி கட்டி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

உதவி ஆட்சியர் பேச்சுவார்த்தை

இந்த நிலையில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டதில் அவரது மகன் விவேக் மயக்கம் அடைந்தார். சங்ககிரி உதவி ஆட்சியர் பால்பிரின்சிலி ராஜ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விவேக்கிடம் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுமாறு அழைத்தார். ஆனால் நான் சிகிச்சை பெற வரமாட்டேன், நான் நலமாகத்தான் உள்ளேன் என்று கூறினார்.உண்ணாவிரதம் பந்தலின் அருகே தயார் நிலையில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வைகோ சந்திப்பு

இந்த நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று இ.மேட்டுக்காடு வந்து சசிபெருமாள் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் சசிபெருமாள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

குடும்பத்தினருக்கு ஆறுதல்

சசிபெருமாள் குடும்பத்துக்கு ஆறுதல் கூற வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று இ.மேட்டுக்காடு பகுதியில் உண்ணாவிரதம் இருக்கும் சசி பெருமாளின் மகன் விவேக்கை சந்தித்தார்.

உடலை பெற கோரிக்கை

உண்ணாவிரதத்தை கைவிட்டு குமரி மாவட்டம் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சென்று சசிபெருமாள் உடலை பெற்றுக்கொண்டு வந்து நல்லபடியாக அடக்கம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்றும் உங்களுக்கு ஆதரவாக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் கூறினார்.

அரசியல் தலைவர்கள் வருகை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், நடிகர் சீமான், மனித நேய மக்கள் கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோரும் இன்று இ.மேட்டுக்காடு வந்து சசிபெருமாள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர்.

உடல் அடக்கம்

சசிபெருமாளின் உடலை பெற அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டியில் நாளை வெள்ளிக்கிழமை சசிபெருமாளின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. மதுவிலக்கு போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் சசிபெருமாளின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+