குற்றாலத்திற்கு குளிக்க சென்ற.. சாட்டை துரைமுருகனை சுற்றி வளைத்த போலீஸ்! திடீர் கைது.. என்ன நடந்தது?
தென்காசி: குற்றாலத்திற்கு குளிக்க வந்த சாட்டை துரைமுருகன் இன்று கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அவ்வப்போது முதல்வர் குறித்தும், ஆட்சி குறித்தும் அவதூறாக பேசி கைதாக்குவது வழக்கம். சமீபத்தில் கூட நாம் தமிழர் கட்சி சார்பாக கன்னியாகுமரியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

குமரியில் இருக்கும் மலைகளை குடைந்து கிரானைட் எடுப்பதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசை விமர்சனம் செய்தார்.
இயற்கை வளங்களை தமிழ்நாடு அரசு காக்க தவறிவிட்டதாக அவர் விமர்சனம் வைத்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட யூ டியூபர் சாட்டை துரைமுருகன் பேசியதுதான் தற்போது சர்ச்சையாகி அவர் கைது செய்யப்பட்டார். நாம் தமிழர் கட்சி மேடையில் முதல்வர் ஸ்டாலினையும், தமிழ்நாடு அரசையும் அவதூறாக அறுவருக்கத்தக்க வகையில் பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதோடு கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் இவர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.
மீண்டும் கைது; இந்த வழக்கில் சிறைக்கு சென்று ஜாமீனில் சாட்டை துரைமுருகன் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில்தான் குற்றாலத்திற்கு குளிக்க வந்த சாட்டை துரைமுருகன் இன்று கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அதன்படி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக புகார் வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சார மேடையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடந்தது. நேற்று நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவு ஆனது. அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்திருந்த நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அப்படி இருக்க 82.48% வாக்குகள் பதிவு ஆனது
இங்கே திமுக , நாம் தமிழர், பாமக இடையே மும்முனை போட்டி உள்ளது. நாம் தமிழர் சார்பாக அபிராமி இங்கே களமிறங்கி உள்ளார். இவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய சென்ற சாட்டை துரைமுருகன் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் குறித்து அவதூறாக பேசினார். முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்து, கடுமையான சொற்களால் விமர்சனம் செய்தார்.
இதையடுத்து சாட்டை துரைமுருகனுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. திருச்சி காவநிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் அதில் வழக்கு பதியப்பட்டு குற்றாலத்திற்கு குளிக்க வந்த சாட்டை துரைமுருகன் இன்று கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications