எச் ராஜாவின் நாக்கில் சனி உள்ளது... டிடிவி தினகரன் காட்டம்!
பெரியார் சிலை உடைக்கப்படும் என கூறிய எச் ராஜாவின் நாக்கில் சனி இருப்பதாக எச் ராஜா தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: பெரியார் சிலை உடைக்கப்படும் என கூறிய எச் ராஜாவின் நாக்கில் சனி இருப்பதாக எச் ராஜா தெரிவித்துள்ளார்.
திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல் தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் அகற்றப்படும் என பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா பதிவிட்டிருந்தார். இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பல இடங்களில் எச் ராஜாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தஞ்சை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் எச் ராஜாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

தினகரன் கருத்து
எதிர்ப்புகள் வலுத்ததை தொடர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட கருத்தை அவசர அவசரமாக நீக்கினார் எச் ராஜா. இந்நிலையில் எச் ராஜாவின் கருத்து குறித்து ஆர் கே நகர் எம்எல்ஏவான டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

எச் ராஜா நாக்கில் சனி
அதாவது தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்ற எச் ராஜாவின் நாக்கில் சனி உள்ளதாக அவர் கூறியுள்ளார். பெரியார் சிலை உடைக்கப்படும் என நாகரிகமற்ற முறையில் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சுயக்கட்டுப்பாடு இல்லை
கம்யூனிசம் உலகுக்கு தேவையான ஒரு கொள்கை. பெரியார் சமூகநீதி முன்னேற்றத்திற்காக போராடியவர், பெண்கள் முன்னேற்றத்திற்காக போராடியவர் என்றும் அவர் கூறினார். எச் ராஜாவுக்கு சுயக்கட்டுப்பாடு இல்லை. அதிகம் கோபப்படுகிறார்.

தமிழ்நாடு கொந்தளிக்கும்
எப்படியாவது கலவரத்தை தூண்டி கட்சியை வளர்க்க பாஜக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. பெரியார் சிலைகளில் கை வைத்தால் தமிழ்நாடு கொந்தளிக்கும் என்றும் தினகரன் கூறினார்.

மக்கள் முடிவு செய்வார்கள்
மானிய ஸ்கூட்டர் தொடர்பான கமலின் கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் உள்ளது என ரஜினி கூறியது குறித்து மக்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு தினகரன் கூறினார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications