சேப்பாக்கம் மைதானத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட 3 கேலரிகளை இடிக்க சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!!
சென்னை: சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 3 கேலரிகளை இடிக்க உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐ, ஜே, கே என்று 3 கேலரிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அமைத்தது. இந்த கேலரிகளை அமைப்பதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், உரிய அரசு அமைப்புகளிடம் இருந்து முறையான அனுமதி எதுவும் பெறவில்லை என்று கூறி சென்னை மாநகராட்சி 3 கேலரிகளுக்கும் சீல் வைத்தது.

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி. ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக நடந்து வந்தது.
சென்னை மாநகராட்சி, சென்னை மாநகராட்சி பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றின் சார்பில் வழக்கறிஞர் கிரி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் அகில் சிபல் ஆகியோர் ஆஜராகி வாதாடி வந்தனர்.
இந்த விசாரணையின் போது சர்ச்சைக்குரிய 3 கேலரிகளில் ஒன்றை இடித்துவிட்டு 2 ஐ பயன்படுத்த கிரிக்கெட் சங்கம் கோரியிருந்தது. ஆனால் பாதுகாப்பற்ற கேலரிகளை பயன்படுத்தவே அனுமதிக்கக் கூடாது என்று சென்னை மாநகராட்சி பெருநகர வளர்ச்சி குழுமம் வாதிட்டது.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கோரிக்கையை நிராகரித்து 3 கேலரிகளையும் இடிக்க உத்தரவிட்டனர்.
மேலும் விதிகளுக்கு மீறி கட்டப்பட்டுள்ளதால் இந்த கேலரிகளை பயன்படுத்த அனுமதிக்கவும் முடியாது; ஐ.பி.எல். போன்ற விளையாட்டுகளை விட பொதுமக்களின் பாதுகாப்புதான் மிகவும் முக்கியம் என்றும் கூறினர்.
இதே சர்ச்சைக்காக கடந்த ஆண்டு சென்னை மைதானத்தில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications