மதுரை: மு.க.அழகிரியின் தயா பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி
மதுரை: மதுரை திருமங்கலத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரிக்குச் சொந்தமான தயா பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தயா பொறியியல் கல்லூரியில் நடப்புக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நாளை முதல் வரும் 19ஆம் தேதிக்குள் நடத்த அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இம்மாதம் 28ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்குமாறு தயா பொறியியல் கல்லூரி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில், கல்லூரியின் தரம் குறித்து அண்ணா பல்கலைக்கழகமோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ நேரில் ஆய்வு நடத்தி, குறைகள் இருப்பின் நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மதுரை தயா பொறியியல் கல்லூரியை நடத்துவதற்குத் தேவையான சான்றிதழ்கள் பெறவில்லை எனக்கூறி, அந்தக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி மறுத்தது.
இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சேர்க்கைக்கு அனுமதியளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை வரும் 21ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications