'சேரி பிஹேவியர்' காயத்ரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாயுமா?
சேரி பிஹேவியர் என்று சொன்ன நடிகை காயத்ரி ரகுராம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம் சேரி பிஹேவியர் என்று தலித் மக்களை கொச்சைப்படுத்தி பேசி இருக்கிறார். அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து அதில் பங்கேற்றுள்ள நடிகை காயத்ரி ரகுராம் கொச்சையாக பேசுவது, உடன் இருப்பவர்களை அவமானப்படுத்துவது என தொடர்ந்து செய்து வருகிறார். ஏற்கனவே அவர் 'எச்ச' என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து, தற்போது சேரி பிஹேவியர் என்று பேசி இருக்கிறார். இது தமிழகத்தில் உள்ள அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் மிக மோசமான கண்டனங்கள் இவருக்கு எதிராக எழுந்துள்ள நிலையில், வழக்கு தொடர்வதற்கான ஆயத்தங்களும் நடந்தேறி வருகின்றன.
குறிப்பாக, சேரி பிஹேவியர் என்று சொன்ன காயத்ரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது. இது தொடர்பாக, கள செயல்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் தனது பேஸ்புக்கில், "பிக் பாஸ் அல்ல. பிக் காஸ்ட். பட்டியல் சாதி மக்களை வார்த்தை ரீதியாக இழிவு படுத்துவது வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 கீழ் குற்றமாகும்.காயத்திரி என்பவர் சேரி பிஹேவியர் என்று இழிவு படுத்தி இருப்பதாக அறியவருகிறேன்.அந்த லிங்க் இருந்தால் அனுப்பவும். உயர் நீதி மன்றத்தில் வழக்கினை தாக்கல் செய்ய உதவியாக இருக்கும்" என பதிவிட்டுள்ளார்.
இதுதவிர பல்வேறு பதிவுகள் காயத்ரி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும் என்பதை வலியுறுத்தி பதிவிடப்படுகின்றன. எனவே, விரைவில் காயத்ரி ரகுராம் மீது வழக்கு பதியப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications