விஜயகாந்துக்கு எதிராக தமிழக அரசின் அவதூறு வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை
சென்னை: விஜயகாந்திற்கு எதிராக தமிழக அரசின் அவதூறு வழக்கை விசாரிக்கத் தடை விதித்து 4 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ் அளித்துள்ளது. அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி விஜயகாந்த் தொடர்ந்த வழக்கின் ஆணை வெளியாகியுள்ளது. மார்ச் 24ல் விஜயகாந்த், பிரேமலதா ஆஜராக திருப்பூர் முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டதற்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த மாதம் பல்லடத்தில் திருப்பூர் மாவட்ட தேமுதிக சார்பில் பொது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதித்து பேசியதாக விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து அவதூறாக பேசியது தொடர்பாக விஜயகாந்த் மற்றும் பிரமேலதா ஆகியோர் மீது திருப்பூர் முதன்னை கோர்ட்டில் வழக்கு தொடரப்படடது. இந்த வழக்கில், வரும் 24ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரமேலதா ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று திருப்பூர் முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வெள்ளப் பாதிப்பு குறித்து பேசியதாகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் நேரில் ஆஜராகும்படி சம்மன்) அனுப்ப சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வழக்கில் விஜயகாந்த் ஏப்ரல் 25ம் தேதி,விஜயகாந்த் ஆஜராக வேண்டும் என்று சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த இரண்டு வழக்குகள் உட்பட விஜயகாந்த் மற்றும் பிரேமலதா மீது தமிழக அரசு 3 அவதூறு வழக்குகளை தொடர்ந்துள்ளது. இதனை எதிர்த்து இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவதூறு வழக்குகளை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இது குறித்து தமிழக அரசு 4 வார காலத்துக்குள் பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications