கம்பம்: தோழி இறந்ததால் துக்கம்... மனமுடைந்த பிளஸ்-2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
கம்பம்: தோழியின் மரணத்தால் மனமுடைந்த பிளஸ் -2 மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவத்தால் கம்பத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கம்பம் கோம்பை ரோடு பகுதியை சேர்ந்த மாட்டு வியாபாரி செல்லமணி. இவரது மகள் மதுமிதா(16), அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் - 2 படித்து வந்தார். மதுவிதாவின் நெருங்கிய தோழி லாவண்யா.
தோழிகள் இருவரும் பள்ளி உட்பட அனைத்து இடங்களிலும் ஒன்றாகவே இருப்பார்களாம். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடும்ப பிரச்சினை காரணமாக லாவண்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
உயிர்த் தோழியின் திடீர்ப் பிரிவால் மனமுடைந்த மதுமிதா, சரிவர சாப்பிடாமல், தூங்காமல் இருந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை பெற்றோர்கள் வேலைக்கு சென்றதும் தனிமையில் இருந்த மதுமிதா துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications