9ம் வகுப்பு மாணவியை சுடுகாட்டில் வைத்து பலாத்காரம் செய்த மாணவர்கள் கைது
தர்மபுரி: தர்மபுரியில் 9 ஆம் வகுப்பு மாணவி கடத்தி சுடுகாட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் மொரப்பூரை அடுத்துள்ள ஜடையம்பட்டி பகுதியை சேர்ந்த 15 வயதுள்ள மாணவி ஒருவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த மாணவி கடந்த இரண்டு நாளுக்கு முன் தன்னை ஐந்து மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதை அவர்கள் மொபைல் போனில் பதிவு செய்து மிரட்டி வருவதாக 1098 என்ற சைல்டு லைனுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தருமபுரி மாவட்ட சைல்டு லைன் இயக்குனர் சைன்தாமஸ் மற்றும் ஆனந்தி அம்பிகா ஆகியோர் மாணவியிடம் இதுகுறித்து விசாரித்தனர். பின்னர் தர்மபுரி கலெக்டர் விவேகானந்தன் மற்றும் எஸ்.பி. லோகநாதனிடம் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுவது குறித்து குறித்து புகார் தெரிவித்தனர்.
அதன் பிறகு காவல்துறை கண்காணிப்பாளர் லோகநாதனின் உத்தரவின் பேரில் அரூர் டி.எஸ்.பி.தட்சிணாமூர்த்தி மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு ஆறு பேரை பிடித்தனர்.
இதில் மாணவியை கடந்த 8 ஆம் தேதி மூன்று பேர் ஆர்.கோபிநாதம்பட்டி மயானத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் அப்போது அவர்களுடன் இருந்த மாணவர் ஒருவர் மாணவியை பலாத்காரம் செய்யும் போது தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதை அவர்கள் தங்களுடைய நண்பர்கள் மேலும் இருவருக்கு காட்டியுள்ளனர். மேலும் மாணவியை மிரட்டியுள்ளதுடன் தங்களது ஆசைக்கு இணங்காவிட்டால் இந்த காட்சியை "வாட்ஸ்அப்பில்" வெளிட்டு விடுவதாக மிரட்டி கடந்த 10 ஆம் தேதியாண்று மாணவியை மறைவிடத்துக்கு அழைத்துச் சென்ற மாணவர்கள் இருவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
இந்த பாலியல் பலாதக்காரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications