வள்ளியூரில் மர்மக் காய்ச்சலுக்கு 7ஆம் வகுப்பு மாணவி பலி!
வள்ளியூரில் ஏழாம் வகுப்புப் படித்து வந்த மாணவி மானசா, மர்மக் காய்ச்சலுக்கு பலியானதால் அப்பகுதியில் சோகம் நிலவி வருகிறது.
நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூரில் காய்யச்சல் காரணமாக ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி இறந்ததால் அங்கு மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அண்ணாநகரை சேர்ந்தவர் மைக்கின். இவருக்கு சுதா என்ற மனைவியும், மானசா என்ற மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். மானசா அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் காய்ச்சலால் மானசா அவதிப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சலுடன் வாந்தியும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரவில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை தாய் சுதா அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் இங்கு போதிய வசதியில்லை என்று கூறி திரும்பி அனுப்பியுள்ளனர்.
அதனையடுத்து மானசாவை தாய் சுதா நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்ததால் குடும்பத்தினரும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.
மானசா வீட்டின் அருகே சாக்கடை கழிவு நீர் கால்வாய் செல்கிறது. இந்த கழிவு நீர் கால்வாய் நீண்ட நாட்களாக சுத்தப்படுத்தப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்காணிக்க வேண்டிய சுகாதார துறையினரும் அப்பகுதிக்கு நீண்ட நாட்களாக வரவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை சுத்தப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications