நாளைக்கும் லீவா?... எல்லாம் "குல தெய்வம்" வாயில்தான் இருக்கு... காத்திருக்கும் குட்டீஸ்கள்!
சென்னை: சுட்டி டிவியும், போகோ சேனலும், கார்டூன் சேனல்களிலும் மூழ்கிக் கிடந்த குட்டீஸ்கள் கடந்த சில நாட்களாகவே செய்திச் சேனல்பக்கம் தலையை சாய்க்கத் தொடங்கிவிட்டனர். ரமணன்தான் இப்போது அவர்களின் குலதெய்வம்.
மழை வரும்னு சொல்லுங்க அங்கிள்... புயல் வரும் சொன்னா கூடுதலா நாலு நாள் லீவு விடுவாங்களே என்ற சந்தோசம்தான்.
பள்ளிக்கு போய் பத்து நாட்கள் ஆகிவிட்டன. மழை நின்றாலும் பள்ளிக்குப்போக மனசில்லை வாண்டுகளுக்கு. காஞ்சிபுரம், திருவள்ளூர் மட்டும்தான் லீவு விட்டிருக்காங்களா? சென்னைக்குக் கிடையாதா என்று ஏமாற்றத்தோடு இருந்த வாண்டூஸ்களின் மனதில் மதியத்திற்கு மேல் பாலை வார்த்தன செய்தி சேனல்கள். ப்ளாஷ் ஓடியதுமே... ஹே-... நாளைக்கு ஸ்கூல் லீவு என்று கத்திக்கொண்டே ஓடுகின்றனர்.

ரமணனுக்கு ஜெ
செய்திச் சேனல் பக்கமே வராத மாணவர்கள் பலரும் இன்று சேனலை மாற்றாமல் பிளாஷ் நியூசுக்காக காத்திருக்கச் செய்த பெருமை வானிலை ஆய்வாளர் ரமணனையே சாரும். அந்த அளவிற்கு செய்திகளுக்கு ஃபேவரைட் ஆகிவிட்டனர் பள்ளி மாணவர்கள்.

சமூக வலைத்தளங்களில் ஆட்டம்
மழை கொட்டு கொட்டு என்று அடித்து ஆட... சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினரை அடி பின்னுகிறார்கள் நம் மக்கள். வெள்ளத்திலும் விடாமல் ஸ்டேட்டஸ் போடுவது நம்ம பயலுகதேன்.

ஓ.பி.எஸ் தப்பவில்லை
அடாது மழை பெய்தாலும் விடாமல் அம்மா புராணம் பாடும் அமைச்சர்களை சும்மா அடித்து ஆடுகிறார்கள்.

விடாம பெய்யுதே
இடைவெளி விடாமல் கொட்டித்தீர்த்த மழைக்கு இவருக்கு சிக்கியது வடிவேலுதான்...

சிக்கினார் சி.ஆர். சரஸ்வதி
அம்மா புரணத்தை அதிகம் பாடும் சி.ஆர் சரஸ்வதி, வலைஞர்களிடம் என்ன பாடு படுகிறார் பாருங்க கொஞ்சம். இனிமே வாயை கொடுத்து வாங்கி கட்டிக்குவாரா என்ன?
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications