புனே அணையில் மூழ்கி பலியான 3 சென்னை சிறார்கள்.. உடல் வராததால் உறவினர்கள் கொந்தளிப்பு
புனே அணையில் மூழ்கி பலியான சென்னையைச் சேர்ந்த 3 சிறுவர்களின் உடல்கள் இன்னும் சென்னைக்கு கொண்டு வரப்படாததால் பெற்றோர்கள், உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
Recommended Video

சென்னை: புனே அணையில் மூழ்கி பலியான சென்னையைச் சேர்ந்த 3 சிறுவர்களின் உடல்கள் இன்னும் சென்னைக்கு கொண்டு வரப்படாததால் பெற்றோர்கள், உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
சென்னை தண்டையார்பேட்டை-எண்ணூர் நெடுஞ்சாலையில் ஈசிஎஸ் என்ற தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்த 20 மாணவர்களை தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று புனேவுக்கு கல்வி சுற்றுலாவுக்காக அழைத்துச் சென்றது.

புனே சென்ற அவர்கள் புனேவுக்கு அருகில் உள்ள முல்சி என்ற அணையைப் பார்க்கச் சென்றுள்ளனர். அங்கு தண்ணீரில் இறங்கி மாணவர்கள் குளித்துள்ளனர். அப்போது 13 வயதான சந்தோஷ், சரவணக்குமார், ஷாஹித் ஆகியோர் நீரில் மூழ்கி விட்டனர். அவர்களை ஆசிரியர்கள் காப்பாற்ற முயன்றும் பலன் இல்லை.
மீட்புப் படையினர் விரைந்து வந்து மூன்று பேரையும் தேடினர். அதில் சந்தோஷின் இறந்த உடல் மட்டுமே கிடைத்தது. மற்ற இருவரின் உடல்களும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் தண்டையார்பேட்டை எச் 6 காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து பெற்றோர்களுக்கு விவரம் தெரிந்து அலறித் துடித்தனர். இந்த நிலையில் 3 சிறார்களின் உடல்களும் இன்னும் சென்னை வந்து சேரவில்லை.
இதுவரை மாணவர்களின் சடலம் பெற்றோர்களிடம் வந்து சேராததால் தண்டையார்பேட்டை பவர் அவுஸ் அருகே பெற்றோர்களுடன் பொதுமக்களும் சேர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரையும் போலீஸார் சமாதானப்படுத்தினர்.
புனே அணையில் மூழ்கி பலியான 3 சென்னை சிறார்கள்.. உடல் வராததால் உறவினர்கள் கொந்தளிப்பு pic.twitter.com/JGJL2lTBW1
— Oneindia Tamil (@thatsTamil) April 28, 2018
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications