தொடரும் கனமழை: சென்னை உட்பட 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விமுறை!
சென்னை: கனமழை காரணமாக சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதகளில் கனமழை இன்னும் ஓயாமல் பெய்துவருகிறது. இதனால் கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த நான்கு வாரங்களாக தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. மழையின் அளவு குறைந்ததை அடுத்து, இன்று பள்ளி, கல்லூரி திறக்கவிருந்த நிலையில் மீண்டும் மழை மிரட்டி வருகிறது.
எனவே சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டத்திலும் மழை பெய்து வருவதால் இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் மீண்டும் தொடர் மழை பெய்து வருவதால் புதுசேரி, காரைக்கால் பகுதி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல், ராமநாதபுரத்தில்..
திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரத்தில் தாழ்வான இடங்களில் இருக்கும் பகுதிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழை காரணமாக இம்மாதம் நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications