For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ல் திறப்பு.. ரெடியாக இருக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் பள்ளிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் பள்ளிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

ஜுன் 7-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Schools will be reopening on June 1st

அதில், ஜூன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும். பள்ளிகளில் கழிவறைகளை சுத்தமாகவும், பழுதுகள் இருந்தால் அதனை சரிசெய்தும் வைத்திருக்க வேண்டும்.

பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை கிருமி நாசினி பயன்படுத்தி தூய்மையாக பராமரிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் புதர்கள், கழிவு பொருட்கள் இல்லாதவாறு தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

10, 11, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதை முன்னிட்டு ரேங்க் முறையை பின்பற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தக்க அறிவுரை வழங்க வேண்டும்.

அரசாணைப்படி செயல்படாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து விளம்பரங்கள் வெளியிடக்கூடாது

மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

English summary
School education director Elangovan has announced that Schools will be reopening on june 1st. He also urged Schools should be ready for reopening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X