இஸ்லாமிய மதவாதக் கட்சி எஸ்டிபிஐ.. உளறிக் கொட்டிய கருணாஸ்
சென்னை: நடிகரும் திருவாடனை தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான கருணாஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் அளிக்க வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், அரசியல் கட்சியான எஸ்டிபிஐ கட்சியை இஸ்லாமிய மதவாதக் கட்சி என்று உளறிக் கொட்டினார்.
பெங்களூரு சிறையில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டுப் போட்ட அதிமுக எம்எல்ஏக்களுக்கு தொகுதி மக்கள் எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்து வாக்களித்த 122 எம்எல்ஏக்களில் திருவாடனை எம்எல்ஏவான கருணாஸ்சும் ஒருவர். அவரை சும்மா விடுவார்களா மக்கள்? வாட்ஸ் அப்பிலும், பேஸ்புக்கிலும் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
இதனால் காதில் இருந்து ரத்தம் வழியும் கருணாஸ், இன்று தன்னை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் அலுவலகம் வந்து புகார் தெரிவித்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், விஜயகாந்த் பேசும் வசனம் மாதிரி என்னை எதிர்த்து போட்டியிட்ட ஜான் பாண்டியன் 9 ஆயிரம் சில்லறை, என்னை எதிர்த்து போட்டியிட்ட இஸ்லாமிய மதவாத எஸ்டிபிஐ கட்சி 7 ஆயிரத்து சில்லறை என வரிசை கட்டினார்.
எஸ்டிபிஐ கட்சி அரசியல் ரீதியாக பொதுமக்களிடம் வேலை செய்யும் ஒரு கட்சி. அது எந்த இடத்திலும் இதுவரை மதப் பிரச்சாரங்களில் ஈடுபட்டது கிடையாது. ஒவ்வொரு தேர்தலிலும் பெரிய கட்சிகளோடு கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. அல்லது தனித்துப் போட்டியிட்டு வருகிறது. அந்தக் கட்சியை இஸ்லாமிய மதவாதக் கட்சி என்று கருணாஸ் சொல்லிவிட்டு அப்புறம் டாமல் என்று எஸ்டிபிஐ கட்சி மாற்றி பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications