வைகோவை மிரட்டியதற்காக எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்- எஸ்.டி.பி.ஐ. கண்டனம்
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பகிரங்கமாக மிரட்டியுள்ள பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவின் பேச்சு அநாகரீகமானது, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கை:
மோடியையோ, மத்திய அரசையோ அல்லது ராஜ்நாத் சிங் போன்ற பாஜக தலைவர்களையோ வைகோ விமர்சித்தால் அவர் செல்லும் இடங்களில் பேசிவிட்டு பாதுகாப்பாக திரும்ப முடியாது என பாஜக வின் தேசிய செயலாளர் எச்.ராஜா மிரட்டல் விடுத்துள்ளார். தமிழக அரசியல் தலைவருக்கு ஊடகங்களின் வாயிலாக விடுத்த இத்தகைய மிரட்டல் கடும் கண்டனத்திற்குரியது. நாகரீகமற்றது. இதற்காக பாஜகவின் எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
கலவரம், வன்முறை, மிரட்டல் மூலம் சமூகங்களுக்கிடையே பிரித்தாளும் கொள்கை பூண்டு அரசியல் நடத்திவரும் பாஜகவுடன் கூட்டணி வைத்ததன் பலனாகவே இந்த மிரட்டலை பார்க்கிறோம்.
பள்ளிக் கல்வி, அரசு அலுவலகங்களில் மத்திய அரசின் கட்டாய இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்த்து வரும் நிலையில்தான் மதிமுக தலைவர் வைகோவுக்கு பாஜகவின் எச்.ராஜா இந்த மிரட்டலை விடுத்துள்ளார். எச்.ராஜா அவர்களின் இந்த மிரட்டல் ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவருக்கு மட்டும் விடுத்துள்ள மிரட்டல் அல்ல. அது ஒட்டுமொத்த தமிழர்களுக்குமான மிரட்டல்.
பல்வேறு கூட்டங்களில் தந்தை பெரியார் பற்றியும், பல்வேறு சமூக தலைவர்கள் பற்றியும் மோசமான முறையில் அவதூறு பேசிவரும் எச்.ராஜாவே தமிழகத்தில் சுதந்திரமாக சுற்றித்திரியும் போது, மோடி அரசின் தவறான கொள்கைகளை விமர்சிப்பதற்கு எதிராக இத்தகைய நாகரீகமற்ற மிரட்டல் விடுத்திருப்பது கண்டனத்திற்குரியது.
அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அரசியலில் விமர்சனங்களை எதிர்கொள்ள திராணியில்லாதவர்கள் ஜனநாக நாட்டில் ஆட்சி, அதிகாரங்களில் அமர்வதற்கு தகுதியற்றவர்களாகவே இருக்க முடியும்.
மத்தியில் ஆட்சி பீடம் என்ற மமதையில் இதுபோன்ற சர்வாதிகார போக்குடன் விடுக்கும் மிரட்டலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். பாஜகவின் வன்முறை அரசியல் தமிழக மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது.
தமிழக நலனுக்காக குரல்கொடுக்கும் அரசியல் கட்சி தலைவர் ஒருவருக்கு விடுக்கப்பட்ட இதுபோன்ற அரசியல் நாகரீகமற்ற மிரட்டலுக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள வேண்டும். சர்வாதிகார போக்குடன் திணிப்பு கொள்கைகள், தமிழர் விரோத கொள்கைகளை முன்னெடுக்கும் பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications