Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டினப்பாக்கம் மீனவர்கள் விவகாரம்.. மேயர் பிரியா இப்படி நடந்துகொள்வது ஏற்புடையதல்ல.. எஸ்டிபிஐ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் மீனவர்கள் மீன் விற்பனை செய்யும் இடத்திற்கு அருகே அமைக்கப்பட்ட லூப் சாலையின் ஓரத்தை மீனவர்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்பது முரணானது. போக்குவரத்து வசதிக்காக லூப் சாலை தான் பாரம்பரிய மீனவர்களின் இடத்தை ஆக்கிரமித்தது என்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கம் சாலையோர மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் ஏ.கே.கரீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

SDPI urged to protect the livelihood of Chennai Pattinappakkam roadside fishermen

சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையில் அமைந்துள்ள கடற்கரை பகுதியை ஒட்டி அமைந்துள்ள மீனவர்களின் மீன் விற்பனை கடைகளை, நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் அகற்றி வருகின்றனர். மீனவர்களின் மீன்பிடி சாதனங்கள், வலைகள், மீன்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர்.

இதற்கு எதிராக மீனவர்கள் போராடிய போதும், அதனை கண்டுகொள்ளாமல் இரண்டு நாட்களாக பெருமளவிலான காவல்துறையினர் உதவியுடன் அதிகாரிகள் கடைகளை துரிதமாக அகற்றி வருகின்றனர்.

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் மீனவர்கள் மீன் விற்பனை செய்யும் இடத்திற்கு அருகே அமைக்கப்பட்ட லூப் சாலையின் ஓரத்தை மீனவர்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்பது முரணானது. போக்குவரத்து வசதிக்காக லூப் சாலை தான் பாரம்பரிய மீனவர்களின் இடத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளது.

SDPI urged to protect the livelihood of Chennai Pattinappakkam roadside fishermen

பூர்வீக உழைக்கும் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களால் உருவானதே சென்னை நகரம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், சென்னை நகரின் வளர்ச்சி என்கிற பெயரில் அவர்களின் வசிப்பிடங்களை, வாழ்வாதாரங்களை காலி செய்ய நினைப்பது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. கடலும், கடல் சார்ந்த இடமும் மீனவர்களுக்கு சொந்தமானது. அதனை உரிமை கொள்ள, அபகரிக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. வளர்ச்சி, நகரமயமாக்கல் என்கிற பெயரில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைப்பது போல் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்க நினைப்பது ஏற்புடையதல்ல.

கடந்த ஓராண்டுக்கு முன்னர் சென்னை மாநகரின் நகர விற்பனைக் குழு (Town vending committee) உயர்நீதிமன்றத்தால் கலைக்கப்பட்ட பிறகு, புதிய குழு இன்னும் மாநகராட்சியால் ஏற்படுத்தப்படாமல் இருப்பதும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கும் ஒரு காரணமாகும்.

நகரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே இருக்கும் கடைகள் பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறதா இல்லையா எனக் கண்டறிந்து, கடைகள் வைப்பதற்கான பகுதியை கண்டறிவது இந்த நகர விற்பனைக் குழுவின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால், குழுவை அமைக்காமல் கடைகளை அராஜகமான முறையில் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றுவது கண்டிக்கத்தக்கது.

SDPI urged to protect the livelihood of Chennai Pattinappakkam roadside fishermen

இந்த நடவடிக்கை தொடர்பில் மாநகராட்சி மேயர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அந்த குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில், எளிய குடும்பத்தில் பிறந்து எளிய மக்களின் வாழ்வாதார சூழலை அறிந்த மேயர் இவ்வாறு நடந்துகொள்வது ஏற்புடையதல்ல. உடனடியாக இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும்.

ஆகவே, உடனடியாக நகர விற்பனைக் குழுவை அமைப்பதோடு, நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சென்னை மாநகராட்சி மேல்முறையீடு செய்து, பாரம்பரிய பட்டினப்பாக்கம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+