ஓடிப்போன ஆசிரியை-மாணவனை தீவிரமாக தேடும் போலீஸ்.. செல்போன், ஏடிஎம் கார்டு டிரேஸ்!
நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் மாயமாகிய, ஆசிரியை, மாணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். மத்திய ரிசர்வ் போலீசில் வேலை பார்க்கும் இவரது மனைவி பெயர் மாரியம்மாள். இவர்களது 15 வயது மகன் சிவசுப்பிரமணியன் அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 3ம் தேதி வீட்டை விட்டு சென்ற சிவசுப்பிரமணியன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கடையநல்லூர் போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர்.

போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கியபோது ஒரு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அப்போது, சிவசுப்பிரமணியன் அவர் படித்து வந்த பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த செங்கோட்டை அருகே காலாங்கரையை சேர்ந்த கோதை (23) என்பவருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
10ம் வகுப்பு படித்து வந்த சிவசுப்பிரமணியனுக்கு ஆசிரியை கோதை பாடம் கற்று கொடுத்து வந்துள்ளார். நாளடைவில் அவர்களுக்குள் காதல் (!) ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் இல்லாத நேரத்தில் வகுப்பறையில் இருவரும் நெருக்கமாக சீண்டிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே தங்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்தால் பிரித்து விடுவார்களோ என்று எண்ணிய அவர்கள் இருவரும் வெளியூர் செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 31ம் தேதி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் வெளியூருக்கு ஓட்டம் பிடித்தனர். போகும் போது சிவசுப்பிரமணியன் தனது வீட்டில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 60 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து மாணவனின் பெற்றோர் புகார் அளித்ததை போலவே, கோதை தந்தையும் போலீசில் புகார் அளித்துள்ளார்.
வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரையும் தேடி வருகின்றனர். இருவரது செல்போனுக்கும் போலீசார் தொடர்பு கொண்டபோது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.கடைசியாக செல்போன் நெட்வொர்க், கன்னியாகுமரியில் டிரேஸ் ஆகியுள்ளது.
இதனிடையே மாணவன் கொண்டு சென்ற ஏடிஎம் கார்டில் பணம் எடுத்தால், அதை வைத்து இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க திட்டமிட்டுள்ளனர்.
ஏனெனில் வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாக, மாணவரின் தந்தை, போலீசாரிடம் கூறியுள்ளார். எனவே அந்த பணத்தை மாணவன் எடுக்க முயலுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மாணவன்-ஆசிரியையை தூக்கி கொஞ்சுவது போன்றும், இருவரும் தற்கொலை செய்து கொண்டது போன்றும் வாட்ஸ்அப்பில் புகைப்படங்கள் வலம் வருகின்றன. அது போலியான படமாக இருக்கும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications