நெல்லை மாவட்டம் கூடன்குளம் இரண்டாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்
நெல்லை மாவட்டம் கூடன்குளம் இரண்டாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
நெல்லை: கூடன்குளம் இரண்டாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. தற்போது வரை 230 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இரண்டு அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஜூலை 10-ம் தேதி இரவு அணுப்பிளவு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பின்னர், கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி இரண்டாவது அணுஉலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு, செப்டம்பர் 6-ம் தேதி நிறுத்தப்பட்டது.

இதில் 300 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து 750 மெகாவாட் உற்பத்தி செய்வதற்காக இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி இரண்டவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கபட்டு நாள் ஒன்றுக்கு 680 மெகாவாட் வரை உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்வதற்காக இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியது.
அதன்பிறகு கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்தது.தொடர்ந்து இயங்கி வந்த இரண்டாவது அணு உலையில் மாதம் 23 ஆம் தேதி பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.பழுதானது சரி செய்யபட்ட நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி காலை 11.40 மணிக்கு மின் உற்பத்தி மீண்டும் துவங்கபட்டது.
மீண்டும் இந்த மாதம் இம்மாதம் 12 ஆம் தேதி இரண்டாவது அணு உலையில் பழுது காரணமாக நிறுத்தபட்டது. இந்த பழுதானது 15 நாட்களுக்குள் சரி செய்யப்படும் என வளாக இயக்குனர் தெரிவித்தார். ஆனால் பழுதானது இன்று சரி செய்யபட்டு காலை 11.22 மணிக்கு மின் உற்பத்தி மீண்டும் துவங்கியது. தற்போது வரை 230 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யபட்டு வருவதாக வளாக இயக்குனர் ஹரி நாராயண் ஷாகு தெரிவித்தார்.
மேலும் இது நாளை காலை 1௦ மணிக்குள் 9௦௦ மெகாவாட் மின்சாரத்தை எட்டும் எனவும் தெரிவித்தார். ஏற்கனவே கோடை வெயிலின் காரணமாக அதிக மின்சாரம் தேவை படும் நிலையில் கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்திற்கு மின் தேவையை ஓரளவுக்கும் ஈடுகட்டும் என எதிர்பார்க்கபடுகிறது.
மேலும் இரண்டாவது அணு உலையில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி இன்னும் ஒரு வார காலத்திற்குள் துவங்கபடும் எனவும் கூடங்குளம் வளாக இயக்குனர் ஹரி நாராயண் ஷாகு தெரிவித்தார். முதலாவது அணு உலையில் தற்போது850 மெகாவாட் உற்பத்தி செய்யபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications