ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமனம்.. ரசிகர் மன்ற தலைவர் அறிவிப்பு!
ரஜினி மக்கள் மன்றத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
சென்னை: ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் மாவட்ட நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார். தற்போது வேலூர் மாவட்ட மக்கள் மன்ற செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கடந்த டிசம்பர் 31ம் தேதி வெளியிட்டார். 2021ல் நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். முறையான கட்சி அறிவிப்பு வெளியாகும் வரை ரசிகர்களை தினசரி அரசியல் குறித்து பேச வேண்டாம் என்று கூறியுள்ளார்.

அவர் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட பின் கட்சி சின்னம், பெயர் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அவர் இணையதளம் மட்டும் ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் தற்போது ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தற்போது முதல்முறையாக வேலூர் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
வேலூர் மாவட்ட மக்கள் மன்ற செயலாளராக ரவி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல் மகளிர் அணி செயலாளராக சங்கீதா நியமனமிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளராக அருண் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் வெளியிட்டார். மற்ற மாவட்டங்களுக்கு கூடிய விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
-
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications