வெங்கடேச பண்ணையார் நினைவு தினம்: தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடையுத்தரவு
தூத்துக்குடி: வெங்கடேச பண்ணையார் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெருவாரியாக உள்ள நாடார் இனத்தை சேர்ந்தவர் வெங்கடேச பண்ணையார். ஜெயலலிதா ஆட்சியின்போது, கடந்த 2003ம் ஆண்டு, ஆகஸ்ட் 26ம் தேதி, போலீசார் சென்னையில் வெங்கடேச பண்ணையார் தங்கியிருந்த ஹோட்டலுக்குள், புகுந்து சுட்டுக் கொன்றனர்.
நாடார் இன மக்கள் பிற இன மக்களால் தாக்குதலுக்கு உள்ளானபோது அவர்களுக்கு ஆதரவாக ரவுடியிசத்தில் ஈடுபட்டவர் வெங்கடேச பண்ணையார். எனவே தென் மாவட்டங்களில் வெங்கடேச பண்ணையாருக்கு மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெங்கடேச பண்ணையாரின் சொந்த ஊரான அம்மன்புரத்தில், அவரின் நினைவு தினம் இன்று (26ம் தேதி) அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை முதல் 27ம் தேதியான நாளை காலை வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மா.ரவிக்குமார் பிறப்பித்துள்ளார்.
தடையுத்தரவு இருப்பதால் மக்கள் கூட்டமாக செல்வதோ, கைகளில் ஆயுதங்களை எடுத்துச் செல்வதோ தடுக்கப்படுகிறது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications