உலகம் அழிந்துவிடும்.. ஓரின சேர்க்கை வேண்டாம்.. கோவை நீதிமன்றத்தில் மதபோதகரால் பரபரப்பு -வீடியோ
இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 ஐ நீக்கப்பட்டு ஓரின சேர்க்கை அனுமதிக்கப்பட்டதற்கு எதிராக கிறிஸ்துவ மத போதகர் ஜெபர்சன் கோவை நீதிமன்றத்தில் கூச்சலிட்டது வைரலாகி உள்ளது.
Recommended Video

கோவை: இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 ஐ நீக்கப்பட்டு ஓரின சேர்க்கை அனுமதிக்கப்பட்டதற்கு எதிராக கிறிஸ்துவ மத போதகர் ஜெபர்சன் கோவை நீதிமன்றத்தில் கூச்சலிட்டது வைரலாகி உள்ளது.
பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டது ஓரினச்சேர்க்கை.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது. சர்ச்சைக்கு உரிய 377 சட்ட பிரிவை நீக்கினார்கள்.

ஆதரவு எதிர்ப்பு
இதற்கு இந்தியா முழுக்க பலர் ஆதரவு அளித்தனர். நிறுவனங்கள் எல்லாம் தங்கள் லோகோவை இதற்காக மாற்றியது. சிலர் ஆதரவு அளித்து வருவது போலவே சிலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். இது இயற்கைக்கு முரணானது என்று கூறுகிறார்கள்.

நீதிமன்றத்தில் கூச்சல்
இந்த நிலையில்தான் ராமநாதபுரத்தை சேர்ந்த கிறிஸ்துவ மத போதகர் ஜெபர்சன் கோவை நீதிமன்றத்தில் இதற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். நீதிமன்ற வளாகத்திலேயே அவர் கத்தி கூச்சலிட்டு உள்ளார். இதை வீடியோ எடுத்த ஆங்கில செய்தி சேனல் (மிரர்நவ்) நிரூபர் அதை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
|
நாடு குட்டிசுவராகி விடும்
அதில் மத போதகர் ஜெபர்சன் கூறியதாவது, ஓரின சேர்க்கைக்கு இடம் கொடுத்தால் தேசம் குட்டிசுவராகி விடும். ஓரின சேர்க்கை மகா பெரிய குற்றம். ஓரின சேர்க்கைக்கு ஆதரவு தெரிவிக்காதீர்கள். ஓரின சேர்க்கை இந்த சமுதாயத்தை சீரழித்துவிடும். ஓரின சேர்க்கை இந்த தேசத்தை பாழாக்கிவிடும்.

அழிவு
ஓரின சேர்க்கைக்கு இடம் கொடுத்த பட்டணம் ஒன்றை கடவுள் அக்கினியால் அழித்தார். அந்த நகரத்தின் அழிவிற்கு ஓரின சேர்க்கைதான் காரணம். ஆணோடு ஆண், பெண்ணோடு பெண் செய்யும் திருமணத்திற்கு யாரும் இடம் கொடுத்து விடாதீர்கள், எல்லாரும் மனம் திருந்துங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார். இவரின் கூச்சலால் அங்கே சில நிமிடம் பரபரப்பு நிலவியது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications