தேமுதிக அலுவலகத்திற்குப் பாதுகாப்பு தொடர்கிறது!
சென்னை: சென்னையில் உள்ள தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்கிறது.
தஞ்சையில் பஸ் நிலையப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் பேனரை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உத்தரவின் பேரில் அவரது கட்சியினர் அடித்து உடைத்து கிழித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தகவல் பரவியதும் அதிமுகவினர் திரண்டு வந்து தேமுதிகவினர் மீது பெரும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலீஸில் அதிமுக சார்பிலும், அரசு சார்பிலும் புகார் தரப்பட்டது. இதையடுத்து விஜயகாந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப் போடப்பட்டது. அதில் 13 தேமுதிகவினர் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் விஜயகாந்த் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் வாங்கித் தப்பினார்.

மேலும் புதுச்சேரியில் விஜயகாந்த் தங்கியிருந்தபோது அங்கு அதிமுகவினர் முற்றுகைப் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள விஜயகாந்த்தின் வீடு, அவரது கட்சி அலுவலகம் உள்ளிட்டவற்றுக்கு நேற்று போலீஸார் பாதுகாப்பு அளித்தனர். அந்தப் பாதுகாப்பு தற்போதும் தொடர்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications