'பார்லிமென்ட்' பொட்டியுடன் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த ஓ.பி!
சென்னை: நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சட்டசபைக்குள் வந்தபோது அவர் கை படு பவ்யமாக கவ்வியிருந்த அந்தப் பொட்டிதான் நமது கண்களை பெரிய லெவலுக்கு விரியச் செய்து வியப்படைய வைத்தது.
அந்த பட்ஜெட் பெட்டியில் உள்ளே என்ன இருந்தது என்பதை விட வெளியில் இருந்த மேட்டர்தான் மிக பிரதானமானது, பிரமாதமானது.

பார்லிமென்ட் பொட்டி
ஓ.பன்னீர் செல்வம் இன்று சட்டசபையில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரை அடங்கிய பெட்டியுடன் அவர் சட்டசபைக்குள் நுழைந்தார்.

செருப்பு கூட அணியாமல்..
முதல்வர் ஜெயலலிதா முன்னே செல்ல அவருக்குப் பின்னால் பெருமிதம் கலந்த புன்னகையுடன், அம்மா முகம் தாங்கிய அந்தப் பெட்டியைப் பத்திரமாக பிடித்தபடி நடந்து வந்தார் பன்னீர்செல்வம். அப்போது காலில் செருப்பு கூட அணியவில்லை ஓ.பி.

பார்லிமென்ட் பின்னணியில் அம்மா
அந்தப் பெட்டியில், முதல்வர் ஜெயலலிதாவின் படம் மிகப் பெரிதாக, பிரமாண்டமாக, அழகாக அச்சிடப்பட்டிருந்தது. பின்னணியில் நாடாளுமன்றக் கட்டடம். அப்படியெ ஜம்மென்று காட்சி தருகிறார் ஜெயலலிதா.

பளிச்சென தெரியும் வகையில்
பெட்டியின் கொண்டியை விட்டு விட்டு, இரு பக்கமும் தூக்கிப் பிடித்தபடி, அதாவது முதல்வர் ஜெயலலிதாவின் முகம் எல்லோருக்கும் பளிச்சென தெரியும் வகையில் தூக்கிக் காட்டியபடி, புன்னகை தவழ நடந்து வந்தார் ஓ.பன்னீர் செல்வம்.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications