கதிராமங்கலம் போராளி சிறையில்.... ஜல்லிக்கட்டு போராளி பிக்பாஸில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவசாயிகளின் நலவாழ்வுக்காக போராடிய பெண்ணை குண்டர் சட்டத்தில் கைது செய்துவிட்டு, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பிரதமரையே கடுமையாக விமர்சித்த ஜூலியை மட்டும் சுதந்திரமாக உலவ விடுவது ஏனோ?

இயற்கை காப்போம் என்றும் பிரச்சாரத்துடன் களமிறங்கி மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களை எதிர்த்து சேலம் மாணவி வளர்மதி துண்டுபிரசுரங்களை விநியோகித்தார். அப்போது அவர் நக்ஸலைட்டுக்கு ஆள் சேர்ப்பதாக கூறி கடந்த 13-ஆம் தேதி கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

 குண்டர் சட்டத்தில்...

குண்டர் சட்டத்தில்...

இதைத் தொடர்ந்து நேற்று அந்த மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். வேளாண் பட்டப்படிப்பு படித்த வளர்மதி அவர் படிப்பு சார்ந்த விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்திலும், விவசாயம் அழிந்து விடக் கூடாது என்ற எண்ணத்திலும் போராட்டத்தில் அதுவும் அறவழியில் ஈடுபட்டார்.

 தமிழக அரசை கேள்வி கேட்டால்...

தமிழக அரசை கேள்வி கேட்டால்...

தமிழக அரசுக்கு எதிராக போராடினால் குண்டர் சட்டம், கேள்வி கேட்டால் வருமான வரி துறை ஏவட்டுமா என்று கேட்பது, மூன்றாம் தரத்துக்கும் கீழ்த்தரமாக பேசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடதான் அரசுக்கு தெரியும்போல். 4 ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்க பாஜகவின் காலை பிடித்துக் கொண்டுள்ளதால் கதிராமங்கலம், நெடுவாசல், மதுவிலக்கு, நினைவேந்தல் நிகழ்ச்சி ஆகியவற்றுக்காக போராடுபவர்கள் மீது கடுமையான சட்டத்தை பாய வைத்தால் எப்படி.

 கல்லூரி பெண் என்றும் பாராமல்...

கல்லூரி பெண் என்றும் பாராமல்...

கல்லூரி பெண் என்றும் பாராமல் அவரது எதிர்காலத்தை பற்றி சிறிதளவும் கவலை கொள்ளாமல் இதுபோன்று குண்டர் சட்டத்தை ஏவுவது சரிதானா? ரூ. 89 கோடி கணக்கில் காட்டப்படாத பணத்தை வைத்திருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தருமபுரி மாவட்ட குழந்தைகள் நல ஆணையத்தில் தற்காலிக பணியாளர் ராஜமீனாட்சியிடம் பணி நிரந்தரத்துக்கு லஞ்சம் கேட்ட அமைச்சர் சரோஜா ராஜ மரியாதையுடன் வலம் வருகிறார். ஒப்பந்ததாரரிடம் பணமோசடி செய்த காமராஜ் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை. இவர்களெல்லாம் தியாகிகள், விவசாயிகளுக்காகவும், இந்த மண்ணுக்காகவு்ம போராடிய வளர்மதிக்கு குண்டர் சட்டமா?

 ஜல்லிக்கட்டு ஜூலி

ஜல்லிக்கட்டு ஜூலி

கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு கோரி மெரீனாவில் போராட்டம் நடத்தியவர்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஜூலியானா. இவர் பிரதமர் நரேந்திர மோடி, அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் என்று கூறிக் கொள்ளும் சசிகலா உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்தார். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையு், எடுக்கவில்லை. இதென்ன பாரபட்சம். விவசாயிகளுக்காக அறவழியில் போராடிய வளர்மதிக்கு குண்டர் சட்டம், சினிமா நடிப்பதற்காக புகழ் பெற போராட்டம் நடத்திய ஜூலி பிக்பாஸில் சொகுசாக இருந்து வருகிறார்.

 டிஆர்பியை அதிகரிக்க...

டிஆர்பியை அதிகரிக்க...

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியை கலந்து கொள்ள வைத்து தங்களது டிஆர்பி ரேட்டை விஜய் டிவி அதிகரித்து வருகிறது. அந்த நிகழ்ச்சியில் சேரி பிஹேவியர் என்று கூறிய காயத்ரி ரகுராம் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆரம்பத்தில் போராளியாக கருதப்பட்ட ஜூலியின் சாயம் இப்போதுதான் வெளுக்க ஆரம்பிக்கிறது. ஜூலியின் உண்மையான சுயரூபம் அவர் குறித்த வெளியான குறும்பட வீடியோவில் தெரிந்துவிட்டது.

'Protest girl' Valarmathi arrested under Gundas act-Oneindia Tamil

பேர், புகழுக்காக...

அப்போ, ஜூலி தான் சினிமாவில் நடிப்பதற்காக புகழ், பிரபலமடைய வேண்டியே ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்துள்ளார். உண்மையாக தமிழ் மக்களுக்காக அல்ல. இவரா போராளி. இவரா வீரதமிழச்சி. போராளி என்ற போலியான போர்வையில் உலா வந்து கொண்டிருக்கும், அரசியல் தலைவர்கள் கடுமையாக விமர்சித்திருந்த ஜூலியை விடுத்து உண்மையிலேயே தமிழ் உணர்வோடு போராடிய வளர்மதியை விடுவித்து தமிழக அரசு சிறிதாவது பிராயசித்தம் தேட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Why the real fighter Valarmathi who fights against Kathiramangalam, Neduvasal was arrested in Kundas act, but Juliana who criticises TN government is in Bigg boss. What a justice?
Please Wait while comments are loading...