சொன்னோமே, செஞ்சோம் பார்த்தீங்களா?: ட்வீட்டும் கருணாநிதி
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி திமுக ஆட்சியின்போது நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து ட்விட்டரில் விளக்கி வருகிறார்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை என்று திமுக குற்றம்சாட்டி வருகிறது. இதை மையமாக வைத்து சொன்னீங்களே, செஞ்சீங்களா என சன் குழும தொலைக்காட்சி சேனல்களில் விளம்பரம் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி தான் சொன்னதை செய்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
உழவர் சந்தை
விவசாயிகளின் விளைபொருட்களை விவசாயிகளே நேரடியாக விற்கும் உழவர் சந்தை கொண்டு வந்த அரசு திமுக அரசு என ட்வீட்டியுள்ளார் கருணாநிதி.
|
கடன் தள்ளுபடி
நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் கூட்டுறவு கடன் ரூ.7 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்தது கலைஞர் தலைமையிலான திமுக அரசு என செய்ததை எடுத்துக் கூறி வாக்கு கேட்கிறார் கருணாநிதி.
|
சமத்துவபுரம்
அனைத்து சாதி மதத்தை சேர்ந்தவர்களும் ஒற்றுமையுடன் வாழ வழிவகுத்த சமத்துவபுரம் கொண்டு வந்தது திமுக அரசு என கருணாநிதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
வரும் முன் காப்போம்
வரும் முன் காப்போம் திட்டம் தந்த அரசு கலைஞர் தலைமையிலான திமுக அரசு என்று ட்வீட்டப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா தான் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து பிரச்சார மேடைதோறும் விளக்கி வரும் நிலையில் கருணாநிதி ட்விட்டரை கையில் எடுத்துள்ளார்.
|
கர்ப்பிணி
கர்ப்பிணி பெண்களை தாயன்போடு அரவணைத்தது திமுக அரசு என கருணாநிதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஏழைகள் வீடு அற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கிய அரசு திமுக அரசு என்று தான் மக்களுக்கு செய்த நலத்திட்டங்களை விளக்கிக் கூறியுள்ளார் கருணாநிதி.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications