கதைய கேட்டுகிட்டு மீண்டும் திமுக, அதிமுகவுக்கு ஓட்டு போட்டீங்க.. உங்கள் கைல குஷ்டம் வரும்.. சீமான்!
சின்னசேலம்: மறுபடியும் உதயசூரியனுக்கோ, இரட்டை இலைக்கோ ஓட்டு போட்டீர்கள் என்றால் உங்கள் கைகளுக்கு குஷ்டம்தான் வரும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
Recommended Video
நாம் தமிழர் கட்சி வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது. 117 ஆண் வேட்பாளர்களும் 117 பெண் வேட்பாளர்களும் களம் காண்கிறார்கள். தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

லாபம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பஸ் நிலையத்தில் சீமான் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தமிழகத்தை பாலைவனமாக மாற்றியதை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. உயிரைக் காக்கும் மருத்துவத்தை தனியார் முதலாளிக்கு லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றியுள்ளார்கள்.

தமிழகம்
ஆற்று மணலை அள்ளி விற்று, பல்லாயிரம் கோடிகளை குவித்துள்ளனர். உடலுக்கு எப்படி தோல் முக்கியமோ அது போல் ஆற்றுக்கு மணல் முக்கியமானது. ஆற்றில் மணலை அள்ளிவிட்டால் ஆறு இறந்துவிடுகிறது. அது போல் தமிழகத்தில் 32 ஆறுகள் அழிந்துவிட்டன.

கற்கள்
அடுத்து மலைகளில் உள்ள கற்களை எம் சாண்ட் மலை மணல் என்று நொறுக்குகிறார்கள். நாங்கள் பெண்களுக்கு சம வாய்ப்பை கொடுத்துள்ளோம். திமுக, அதிமுக கட்சிகள் பெண்களுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கியுள்ளது என்பதை நீங்களே ஒப்பிட்டு பாருங்கள்.

இரட்டை இலை
மறுபடியும் உதயசூரியன், இரட்டை இலைக்கு நீங்கள் ஓட்டு அளித்தீர்கள் என்றால் உங்கள் கைக்கு குஷ்டம்தான் வரும் என சீமான் தெரிவித்தார். பெரும்பாலான பிரச்சாரங்களில் எங்களுக்கு போடுங்கள் ஓட்டை, அப்பறம் பாருங்கள் தமிழ் நாட்டை என்றும் சீமான் கூறிவருகிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications