சீமான் இல்லத்தில் தைப்பூச வழிபாடு
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இல்லத்தில் தை பூச வழிபாடு நடைபெற்றது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இல்லத்தில் இன்று தைப்பூச வழிபாடு நடைபெற்றது.
தமிழர் கடவுளான முருகன், குறிஞ்சி நிலத் தலைவன்; ஆகையால் முப்பாட்டன் என்பது நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு. நாம் தமிழர் கட்சியின் சார்பாக முருகனுக்குரிய தைப்பூச வழிபாடு சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு சீமான் தமது இல்லத்தில் அமைத்துள்ள திருமுருகன் குடிலில் உள்ள முருகன் சிலைக்கு தீபாரதனை காட்டி வழிபாடு செய்தார். நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களும் இந்த வழிபாட்டில் பங்கேற்றனர்.
திருமுருகன் குடில்
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) January 31, 2018
தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன், தமிழர் இறைவன்
நமது முப்பாட்டன் #முருகன் பெரும்புகழ் போற்றி! போற்றி!
தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் இல்லம். மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி pic.twitter.com/flVor9H881


Click it and Unblock the Notifications
