நான் பச்சை தமிழன்னு கர்நாடகாவில் போய் ஒரு முறை சொல்லிட்டு வாங்க பார்ப்போம்- ரஜினிக்கு சீமான் சவால்
நான் பச்சை தமிழன்னு கர்நாடகாவில் போய் ஒரு முறை சொல்லிவிட்டு வாங்க பார்ப்போம் என்று ரஜினிகாந்துக்கு சீமான் சவால் விடுத்துள்ளார்.
சென்னை: நான் பச்சை தமிழன்னு அரசியலுக்கு வரும்போது சொல்லும் ரஜினிகாந்த், இந்த வார்த்தையை ஒரே ஒரு முறை கர்நாடகத்துக்கு சென்று சொல்லிவிட்டு வர சொல்லுங்கள் பார்ப்போம் என்று அவருக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் தன்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்காக நன்மை செய்வேன் என்றும் ரஜினிகாந்த் கடந்த மே மாதம் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பு கூட்டத்தின்போது தெரிவித்திருந்தார். இதிலிருந்து ரஜினி அரசியலுக்கு வர விருக்கிறார் என்பது தெரியவந்தது.

இதற்கு சீமான் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்று சீமானும் தமிழ் அமைப்பினரும் தெரிவித்தனர். இதையடுத்து ரஜினி தான் ஒரு பச்சைத் தமிழன் என்றும் தான் பிறந்தது கிருஷ்ணகிரி மாவட்டம் என்றும் பிழைப்புக்காகவே கர்நாடகத்துக்கு சென்றோம் என்றும் கூறியிருந்தார்.
இதற்கும் கடும் கொந்தளிப்பு எழுந்தது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக ரஜினி அறிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து சீமான் பேசுகையில், தமிழகத்துக்கு ரஜினி வந்து 44 ஆண்டுகள் ஆயிற்று எனினும் அவர் இதுவரை தான் ஒரு பச்சைத் தமிழன் என்று ஒரு தருணங்களில் கூட சொன்னதில்லை.
ஆனால் தமிழக மக்களை ஆள வேண்டும் என்ற எண்ணம் எப்போது வந்து விட்டதோ அப்போதே அவர் தான் ஒரு தமிழர் என்று கூறி வருகிறார். தான் ஒரு பச்சைத் தமிழன் என்பதை கர்நாடக மாநிலத்துக்கு சென்று ரஜினியை ஒரே ஒரு முறை கூறிவிட்டு வரசொல்லுங்க பார்ப்போம். இதை பந்தயமக சொல்லிகிறேன். அவர் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு சேலன்ஞ் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications