திமுக இல்லாத மதச்சார்பற்ற கூட்டணியை திருமா உருவாக்கலாம்- நாங்க தனித்தே போட்டி: சீமான்
சென்னை: திமுக இல்லாத ஒரு மதச்சார்பற்ற கூட்டணியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் முன்னெடுக்கலாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றது விடுதலைச் சிறுத்தைகள். உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் நலக் கூட்டணியில்தான் நீடிப்போம் என திருமாவளவன் கூறி வருகிறார்.
அதே நேரத்தில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்குவோம் எனவும் திருமாவளவன் கூறி வருகிறார். இதனால் அவர் திமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக யூகங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் திருமாவளவனின் இந்த மதச்சார்பற்ற கூட்டணி தொடர்பாக புதிய தலைமுறை டிவியின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் சீமான் கூறியதாவது:

பாஜகவிடம் ஆதரவு கேட்ட திமுக
நாடாளுமன்றத்தில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிராக வாக்களித்தால் மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஆதரவாகிவிடும் என்றது திமுக. ஆனால் ஏற்காடு இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பினார் கருணாநிதி.

இந்துக்கள்
திமுகவில் 90% பேர் இந்துக்கள்தான் என்கிறார் ஸ்டாலின். நாளையே நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெல்லும் நிலை உருவானால் அக்கட்சியுடன் திமுக கூட்டணி அமைக்கவும் தயங்காது.

திமுக மதச்சார்பற்ற கட்சி அல்ல
ஆக மதச்சார்பற்ற கட்சியாக திமுகவை பார்க்க முடியாது. பாஜகவுடன் இதுவரை காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள்தான் கூட்டணி வைக்கவில்லை.

இப்படி செய்யுங்க..
அதனால் நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணியை அமைக்க முயற்சித்தால் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்து ஒரு கூட்டணி உருவாக்கலாம். இதில் திமுகவை சேர்த்துக் கொண்டால் எப்படி மதச்சார்பற்ற கூட்டணியாக இருக்கும்?

தனித்தே போட்டி
நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரையில் தனித்துதான் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் மக்களுக்கு நெருக்கமாகி அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு வளர்ச்சியடைய வேண்டும்.
இவ்வாறு சீமான் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications