இமானுவேல் சேகரன் நினைவுதினம்.... சீமான் மலரஞ்சலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இமானுவேல் சேகரனின் நினைவுதினத்தையொட்டி நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் சீமான் அஞ்சலி செலுத்தினார்.

இமானுவேல் சேகரனின் 60ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அதனையொட்டி ராமநாதபுரத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Seeman paid homage to Imanuvel sekaran.

இந்நிலையில், இமானுவேல் சேகரனுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மறக்க முடியாத இமானுவேல் சேகரன்-வீடியோ

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார் என்பதற்காக இமானுவேல் சேகரன் 1957ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத 6 பேரால் வெட்டிக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Naam Tamilar katchi coordinator Seeman paid homage to Imanuvel sekaran.
Please Wait while comments are loading...