அனிதாவுக்கு நீதி.. திமுக, காங்., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வக்கீல்களுடன் இணைந்து போராட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரியலூர் அனிதா உயிரிழப்புக்கு மத்திய- மாநில அரசுகளே காரணம் என்று கூறி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களின் தொடர் முழக்க போராட்டத்தில் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக எம்.பி. கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வால் மருத்துவம் பயில முடியாமல் போனது. உச்சநீதிமன்றம் வரை சென்றும் நீதி கிடைக்காததால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரியும், அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் மாணவர்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து விட்டு தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 வழக்கறிஞர்கள் போராட்டம்

வழக்கறிஞர்கள் போராட்டம்

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் தொடர் முழக்க போராட்டத்தை இன்று தொடங்கினர். இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

 யார் யார் பங்கேற்பு

யார் யார் பங்கேற்பு

இந்த போராட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திமுக எம்.பி. கனிமொழி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 கோரிக்கைகள்

கோரிக்கைகள்

போராட்டத்தில் மாணவி அனிதா உயிரிழப்புக்கு காரணமான மத்திய- மாநில அரசுகளை கண்டிப்பது, மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் நீட் உள்ளிட்ட அகில இந்திய நுழைவு தேர்வுகளை ரத்து செய்வது.

 கல்வியை அரசே நடத்த...

கல்வியை அரசே நடத்த...

கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தியும், கல்வியில் தனியார் ஆதிக்கத்தை ஒழித்துவிட்டு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அரசே வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Highcourt advocates starts protest against Centre and state governments in Anitha's suicide issue.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற